இன்று வாசித்த ஒரு செய்தி மகிழ்ச்சியை அளித்தது. பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு சிகிழ்ச்சைக்குப்பின் பார்வை திரும்பியிருக்கிறது. கமல் இயக்கிய செல்லுலாய்ட் என்னும் படத்தில் பாடிய காற்றே காற்றே என்னும் பாடல் வழியாக கேரளம் முழுக்கப் பிரபலமானவர் இவர். பிறவியிலேயே பார்வையில்லாதவரான விஜயலட்சுமி மரபிசையை முறையாகக் கற்றவர். அபூர்வமான வாத்தியமாகிய காயத்ரிவீணையை வாசிக்கும் கலைஞர். நாநூறுக்கும் மேல் இசைநிகழ்ச்சிகளை செய்திருக்கிறார்
காற்றே காற்றே
https://www.youtube.com/watch?v=plBblGDLSAQ