தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள் 2

1

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

‘மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்’ என்ற கட்டுரையில் 20.09.2016 அன்று இவ்வாறு குமுறியிருந்தீர்கள் இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன் பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்

இதற்காக நீங்கள் எவ்வளவு தூரம் வசைகளுக்கு ஆளாக நேர்ந்தது என்பதை நாங்கள் அறிவோம். அன்று முதல் இன்று வரை ஊடகங்களிலும்,

பொதுவெளிகளிலும் வெறி பிடித்து இவர்கள் சாமியாடி வருவதையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் இன்று இரண்டு மூன்று ஊடங்களில் வந்துள்ள செய்திகளை தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

  • மோதி அரசாங்கம் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்த பின் 60 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.2லட்சம் அதற்கு மேற்பட்ட தொகைகளில் வைப்பு வைக்கப்பட்ட தொகை 7.34 லட்சம் கோடியாகும் (பழைய ரூ.1000,500 பணத்தாள்களில் மதிப்பில் பாதி)
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் கிட்டத்தட்ட ரூ.80,0000 கோடிக்கு கடன் தொகை திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
  • சுமார் மூன்று முதல் நாலுலட்சம் கூடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாத பணம் வரைவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது
  • ரூபாய்.42,000 கோடி மதிப்புக்கு,2 முதல் 2 லட்சம் வரை வங்கியில் வரவு வைக்கப்பட்ட கணக்குகள் பொதுவான PAN எண்ணையும்,மொபைல் எண்ணையும் கொண்டுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

இது போன்ற பலன்களை குறுகிய காலத்தில் நிகழ்த்தி இருக்கும் இந்த நடவடிக்கையை பாராட்ட மனம் இல்லாவிட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாம் அல்லவா?

மோதி எது செய்தாலும் அதை எதிர்மறையான எண்ணத்துடன் பார்ப்பவர்கள் என்றுதான் திருந்துவார்கள்? ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த அதிமேதாவிகளைக் காட்டிலும் நமது நாட்டின் எளிய மனிதர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாலும் இது சரியான நடவடிக்கைதான் என்பதை நாளும் உறுதி செய்து வருகிறார்கள் என்பதுதான் என் எண்ணம்.

http://www.firstpost.com/business/demonetisation-tax-evasion-suspected-in-rs-3-4-lakh-cr-deposits-post-note-ban-3197010.html

ndiatoday.intoday.in/story/demonetisation-tax-evasion-government-income-tax-department-ed/1/853750.html

அன்புடன்,

அ .சேஷகிரி.

 

தாள்பணமில்லா பொருளியல் பாலா

அரங்கசாமி எதிர்வினை

பாலா எதிர்வினை

முந்தைய கட்டுரைவைக்கம் விஜயலட்சுமியின் பார்வை
அடுத்த கட்டுரைஜல்லிக்கட்டுத்தடை- ஒரு பேட்டி