விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு

1

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.
இந்த காணொளியில் விஷ்ணுபுரம் விருது நிகழ்வில் நீங்கள் (அரங்கா) உட்பட மற்ற விஷ்ணுபுரம் நண்பர்கள் பேசியது முழுவதுமாக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான விருந்தினர்களின் உரையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இணைத்துள்ளோம்.
எச். எஸ். சிவப்பிரகாஷ் பேசும் போது ஏற்பட்ட ஆடியோ கோளாறுகள் சரி செய்யப்பட்டு இந்த தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
வழங்கும்
விஷ்ணுபுரம் விருது 2016 – சிறப்பு தொகுப்பு
Vishnupuram Award 2016 – Highlights
நன்றி
கபிலன்
அன்புள்ள கபிலன்
சுருதி ட்வி மூலம் நீங்கள் செய்துவரும் பணி மிகவும் நன்றிக்குரியது. இன்று உடனடியாக இதன் மதிப்பு புரியாமலிருக்கலாம். எதிர்காலத்தில் இவற்றின் ஆவணமதிப்பு மிக முக்கியமானது. இதை எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் தயாரிக்கும்போது அறிகிறோம். வாழ்த்துக்கள்
ஜெ
முந்தைய கட்டுரைசென்னை கொண்டான்
அடுத்த கட்டுரைஅராத்து கேள்விகள்…