விஷ்ணுபுரம் விருது விழா – சுகா

7

 

// இன்றைய என்னை நான் வடிவமைத்துக் கொள்ள தானறியாமல் தன் எழுத்து மூலம் உதவிய மகத்தான படைப்பாளியுடன் மூன்று தினங்கள் இருந்த மனநிறைவுடன் கிளம்பினேன். அண்ணாச்சியை வணங்கி விடைபெற்றேன். விமான நிலையத்துக்கு தனது காரில் அனுப்பி வைத்தார் சகோதரர் முத்தையா. விமான நிலைய வாசலில் ஜான் சுந்தரிடம் விடைபெறும் போது இருவருமே ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. விமானம் கிளம்பும் போது வழக்கமாகச் சொல்லும் சண்முக கவசத்தைச் சொல்லவில்லை. மனம் அலைந்து கொண்டிருந்தது. கோல்டன் ரெட்ரைவர், பக் மற்றும் பீகிள் குட்டிகள், ‘முழுமதி அவளது முகமாகும்’ பாடிய ரோஜா பாப்பா, தகப்பனார் மரணப்படுக்கையில் இருக்கும் போது எங்களுடனே இருந்து உபசரித்த மரபின் மைந்தன், உங்களுக்குத்தாண்ணா நன்றி சொல்லணும் என்று ஃபோனில் ஒலித்த அரங்கசாமியின் குரல், ஏன்ணே அழுதீங்க? காபி சாப்பிடுங்க’ என்ற ஹெமிலா சாம்ஸன் என மனதுக்குள் குரல்களும், முகங்களுமாகச் சுழன்றன. கண்ணீர் பெருகியது.//

http://venuvanam.com/?p=348

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72