விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. 2008இல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்றபேரில் ஒரு எளிய நண்பர் கூட்டு ஆரம்பமானது. ஒரு விருது வழங்கினாலென்ன என்னும் எண்ணம் ஒருமுறை பேச்சில் எழுந்தது. முன்னோடிகள் அரசுத்துறைகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாது போவதற்கு எதிரான ஒரு செயல்பாடாக இது தொடங்கப்பட்டது. முழுக்கமுழுக்க வாசகர்கள் அளிப்பது, சக எழுத்தாளர் அளிப்பது என்று பெயரிலேயே தெரியவேண்டும் என்பதற்காகவே விஷ்ணுபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. முதல் விருது 2010ல் ஆ மாதவனுக்கு அளிக்கப்பட்டது
இன்று பழைய நினைவுகளை எடுத்துப்பார்க்கையில் நிறைவும் ஓர் இனிய சோர்வும். ஆரம்பத்தில் இருந்த பல நண்பர்கள் இப்போது தீவிரமாக இல்லை. பலர் பணிநிமித்தம் வெளிநாடுகளில். பலர் விலகிச்சென்றிருக்கிறார்கள். புதியவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். புதியவேகம் வருடந்தோறும். இன்று தொடங்கியதைவிட மும்மடங்குபெரிய விழா. பெரிய நிதித்தேவையுடன்
ஞானக்கூத்தனை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நண்பர் சந்திரசேகரையும்
.
விஷ்ணுபுரம் விருது ஆ மாதவன் 2010 பதிவு
விஷ்ணுபுரம் விழா கோபிராமமூர்த்தி பதிவு
அன்பின் வழியே இரண்டுநாட்கள் சுரேஷ்பாபு பூமணிவிழா பற்றி
விஷ்ணுபுரம் விருது 2012 நினைவுகள் தேவதேவன்
தேவதேவன் விருது உரை ராஜகோபாலன்
தெளிவத்தை ஜோசப்புக்கு விருது 2013 பதிவுகள்
செலேவ்ந்திரன் பதிவு 2013 தெளிவத்தை ஜோசப்
விருதுவிழா புகைப்படக்குறும்புகள்
ஞானக்கூத்தன் விழா பற்றி அழகியசிங்கர்
உவக்கூடி உள்ள ப்பிரிதல் சுனீல் கிருஷ்ணன்
தேவதச்சன் விருதுவிழா 105 பதிவுகள்
தேவதச்சன் விழா பதிவு சுநீல் கிருஷ்ணன்
===============================