இன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன

2

 

நண்பர்களுக்கு,

2016 க்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கும் விழாவை ஒட்டி நிகழும் விவாத அமர்வுகள் இன்று காலை முதல் குஜராத்தி சமாஜில் தொடங்குகின்றன. அங்கேயே தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளில் எச்.எஸ். சிவப்பிரகாஷ், வண்ணதாசன், இரா.முருகன், பவா.செல்லத்துரை கு சிவராமன் ஆகியோர் பங்கெடுக்கிறார்கள். விவாதங்களில் நாஞ்சில் நாடன்,  ஜோ டி குரூஸ், தேவதேவன், எம்.கோபாலகிருஷ்ணன், சாம்ராஜ், புவியரசு ,சு.வேணுகோபால், கலாப்ரியா, அராத்து, பாரதிமணி, சுகா, லட்சுமி மணிவண்ணன், ரோஸ் ஆன்ரோ, கே.என்.செந்தில்,  இசை, முருகவேள், க.மோகனரங்கன், சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், ஜான் சுந்தர்,  ஓவியர் ஜீவா, மரபின்மைந்தன் முத்தையா போன்ற பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கெடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இவர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகளுக்கும் அரங்க விவாதங்களுக்கும் இந்த நிகழ்வு களமாக அமையவேண்டுமென விழைகிறேன்.

அனைவரையும் வரவேற்கிறேன்.

ஜெ

தொடர்புக்கு

9597633717

9965846999

 

சந்திப்புகள் நிகழும் இடம்

குஜராத்தி சமாஜ்:

662, மேட்டுப்பாளையம்  ரோடு, வடகோவை, கோவை – 641002

Location:  https://goo.gl/maps/z9kGnguU24F2

(காந்திபுரத்திலிருந்து 7, 76, 1D, 1B, 1A பேருந்தில் வடகோவை நிறுத்தத்தில் இறங்கவும்.)

 

விருது வழங்கும் விழா நிகழும் இடம்:

பாரதிய வித்யா பவன்:

582, டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை – 641002

Location:  https://goo.gl/maps/2SpdDyEvf6L2

Coimbatore – 641 002

முந்தைய கட்டுரைதாமிராபரணம்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67