வருகையாளர்கள் -2 இரா முருகன்

index

நவீனக்கலை விதவிதமான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கிறது. அறமுரைக்கும் தோரணை கொண்ட  பழையபாணி எழுத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதே அதன் இலக்கு. அந்தப்பாவனை மேலோட்டமானது, வாசகனை சற்றே ஏமாற்றுவது. அதன் அடியில்தான் ஆசிரியனின் நோக்கும் விமர்சனமும் இருக்கும்.

அதில் முக்கியமானது விளையாட்டுத்தனம் என்னும் பாவனை. தமிழில் அந்த கலைப்பாவனையின் தொடக்கம் கல்கி.  மிகச்சிறந்த உதாரணம் சுஜாதா. நடை, கூறுமுறை அனைத்திலும் சரிதான் இப்ப என்ன என்னும் ஒரு வேடிக்கைநிலை அவருடையது. அந்த பாவனையின் நீட்சி என்று இரா முருகனைச் சொல்லலாம். சுஜாதா அவருடைய தாவுமேடை மட்டுமே. நுணுக்கமான மாய யதார்த்தம் வழியாக அவர் சுஜாதாவைக் கடந்துவந்தார். வரலாற்றை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து இஷ்டத்துக்கு அடுக்கி விளையாடும் அரசூர் வம்சம், விஸ்வரூபம் நாவல்கள் வழியாக அவர் தன் தனிமொழியையும் தனிநோக்கையும் தமிழிலக்கியத்தில் நிறுவிக்கொண்டார்

இவற்றிலுள்ள விளையாட்டுத்தனம் வாசகனை ஏமாற்றுவது. அதைக் கடப்பவனே இவ்வெழுத்தின் உண்மையான வாசகன்.. அந்த விளையாட்டுத்தனத்தை அகற்றி அடியிலிருக்கும் சமூகவிமர்சனத்தையும் வரலாற்று அணுகுமுறையையும் நோக்குவது ஒரு நுண்வாசிப்பு.   ஆனால் ஆசிரியனுடன் தானும் விளையாடியபடி அங்கே சென்றுசேர்வதென்பதுதான் உண்மையான வாசிப்பு. பொருளற்ற வாழ்க்கைப்பிரவாகமாக, எல்லா தருணங்களிலும் உரிய அபத்தங்களுடன் நிகழும் வரலாற்றை முருகன் அவருடைய கதைகளினூடாகச் சித்தரிக்கிறார். தமிழிலக்கியத்தின் தனிச்சுவைகளில் ஒன்று அது

வாழ்ந்து போதீரே என்னும் நாவலை தன் இணையதளத்தில் இரா முருகன் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்

========================================================

இரா முருகன் விக்கி பக்கம்

இரா முருகன் இணையதளம்

இரா முருகனின் சிறுகதைகள் சில  சிறுகதைகள் இணையதளம்

இரா முருகனின் விஸ்வரூபம் – சுரேஷ் கண்ணன்

இரா முருகனின் விஸ்வரூபம் அர்விந்த்

========================================

பஷீர்- இரா முருகன் கடிதம்

ஆற்றூர்- இரா முருகன் கடிதம்

=======================================

 

பிற அழைப்பாளர்கள்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ்

 

முந்தைய கட்டுரைவருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்
அடுத்த கட்டுரைமனிதமுகங்கள் -வளவ. துரையன்