கன்றுகள் காடாகவேண்டும்!

3

 

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன்.

இன்று மார்கழி 2, ஒரு வித திருப்தியுடன் எந்த வகையில் என்று தெரியவில்லை ஆனால் எண்ணிக்கொள்ளும்படியான நிறைவு இந்த கடிதம் எழுதிகிறேன். கார்த்திகை மாத மூன்றாம் வாரத்தில் தோட்டப் பணி தொடங்கி கார்த்திகை 24 அன்று செடி நடவு தொடங்கி அன்றே இனிதே நிறைவேறியது. அனைத்தும் மரப்பயிர் 30 வகையான மரங்கள், மரங்கள் என்பதை கடந்து புளி, புன்ணை, கொடுக்காப்புளி, கொய்யா, பலா, தான்றிகாய் என்று பல்லுயிர் பெருக்கம் நோக்கத்துடன் களவை, பின் நாட்களில் அடுத்த சந்ததிக்கு மரமாகலாம்.

அனுபவம் இல்லாது அனுமானங்கள் நல்ல பாடங்கள் கற்றுதருகிறது. கார்த்திகையில் மழை வரும், 15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் என்பதை கேட்டு சரி ஒரு மழை வந்திருச்சு உழவு பன்னியாச்ச இன்னொரு மழை வந்திரும், கிணற்றில் உள்ள தண்ணீரை இயந்திர மூலம் இறைப்போம் என்று களம் கண்டோம். நடவு நாள் நெருங்க நெருங்க பதட்டம் தான் மழை இல்லாததால் (எண்ணிக்கையில் குறைவாகயுள்ள) இயந்திர இறைப்பான்கள் கண்மாய் பாசனங்களுக்கு சென்றுவிட்டது. இன்றோடு நடவு முடிந்து 9 நாட்கள் ஆயிற்று முன்று முறை இடங்கர் வண்டி மூலமாக தண்ணீர் ஊற்றியுள்ளோம், இன்னும் சில முறை தொடரும், ஆழ்துளைக் கிணறு பணிகள் தொடங்கியுள்ளது எப்படியும் மாதம் பிடித்துவிடும் முடிவடைய.

ஆறாம் பணியும் முதல் கட்டம் நிறைவுற்றது.  ஐந்தாம் பணி மின்சாரம்ம்ம்ம் இத்தனை ‘ம்’ தேவைப்படுது சார் ;) மீண்டும் சென்றோம் வேளாண் வகை நேரடி சாத்தியம் இல்லையாம், இலவச இணைப்பு வின்னப்பித்த பிறகு அதன் அடிப்படையில் வேளாண் (3.50 பைசா) விண்ணப்பிக்கவேண்டுமாம். இலவச மின்சாரம் விண்ணப்பிக்க, காரம நிர்வாக அலுவலர் பணிகள் முடிக்க வேண்டும், பற்றோன்னடங்கல், சிட்டாடங்கள், கிணறு உரிமைதாரர் சான்றிதழ், இதில் கிணறு புஞ்சை வரை படத்தில் இல்லை ஆகையால் தாலுக் அலுவலகத்தில் எழுதி வைத்து நில அளவிடுவர் வந்து அதனை வரைப்படத்தில் ஏற்றவேண்டும் இப்படி நீண்டுக்கொண்டேபோகிறது. இதற்கேல்லாம் இப்பொது யோசிப்பதில்லை சார் அது அது பாடு நடக்கட்டும் என்ற தொடர்கிறோம். ஒரே சாத்தியம் மாற்று சூரிய சக்தி மின்சாரம் தான்.

வங்கி வகையில் மூன்றாவது 13% குறையாது என்ற வகையில் முடிவுற்றது. நான்காவதாக என்னும் ஒரு வங்கி புதிதாக கிளை தொடங்கியுள்ளன்ர் சாத்தியங்கள் உண்டு என்று கூற, நாங்கள் விண்ணப்பித்து அவர்கள் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருக்கிறார்கள்..

கடந்த நான்கு வாரங்களில் பாடங்கள் குறிப்பிட சில,

அ இன்றைய உணவு முறையும் பழக்கவழக்கங்களும் முறைப்படுத்தவேண்டும் உடல் -> உழைப்பிற்கு தயாராக. ஒரு வரிசை வாயிக்கால் எடுப்பதற்குள் முச்சு முட்டுது சார் ;). இதில்லாமல் நுணுக்கங்கள்  வேறு.

ஆ ஆட்களை வேலை வாங்க தனி திறமை வேண்டும். ஆள் இருந்தால் ஒரு மாதிரி ஆள் இல்லையேன்றால் ஒரு மாதிரி. உடல் உழைப்பு கடினம் ஆகையால் கடிந்து கொள்ளமுடியாது ஆனால் அவர்களாவே அந்த  வேலைக்கான அறத்தை பின்பற்றினால்தான் உண்டு (அறம் செய விரும்பு). தொடர்ச்சியின் பலனாக அந்த இடம், ஆட்கள் பழகிய பின் ஒரு புரிதல் வந்து அதற்கு பிறகு அனைத்தும் சரியாகுமாக என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

இ புவிசார் (ஊர், வட்டம், கருவிகள் வாடகைதார்கள், ஓட்டுனர்கள்) ஒத்துழைப்பு மிக அவசியம் முன் திட்டங்களும் கை கொடுக்காது அவ்வப்போது தேவைப்படுவது அவ்வப்போது தான் தெரியவருகிறது நிறைவேற்ற அகவாசம் குறைவே ஆகையால் உள்ளூர் பழக்கம் மிகுந்த உதவி. அனைத்து கருவிகளும் வண்டிகளும் சொந்தமாக இருப்பின் ஒரு வேளை முன் திட்டங்கள் கை கொடுக்களாம்.

இதற்கும் அப்பால் மன வல்லமை எந்த அளவு என்ற சோதனைகள் கடந்து கொண்டிருக்கும் காலம், இதில் நிறைவு, காரியங்கள் நல்ல படியாக முடிந்து கொண்டிருக்கிறது. முன்னோர்கள், பெரியோர்கள் ஆசிர்வாதங்கள் இருந்து அருளவேண்டும். கன்றுகள் காடாக அருளவேண்டும்

இத்தனை சிரமமில்லாமல் இருந்திருக்களாம் சில காலம் தாமதித்திருந்தால் ஆனால் ‘பருவத்தே பயிர் செய்’ என்பதை தொற்றிக்கொண்டேன். இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை என்ற நம்பிக்கை.

என் தந்தைக்கு சிறப்பு நன்றிகளை பதிவுசெய்யவேண்டும்.

மற்றபடி, தாங்களையும் தங்கள் இலக்கிய சுற்றத்தையும் பின் தொடர்கிறேன் ஆனால் கலந்துகொள்ளமுடியவில்லை விரைவில் வேகத்தை ஈடுசெய்யவேண்டும். விஷ்ணுபுரம் விருது விழா சிறப்புறப் பிரார்த்திக்கிறேன்.

 

நன்றி

நாராயணன் மெய்யப்பன்

 

இயற்கைவேளாண்மை அனுபவங்கள் நா மெய்யப்பன் கடிதங்கள் 1

இயற்கைவேளாண்மை அனுபவங்கள் நா மெய்யப்பன் கடிதங்கள் 2

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77
அடுத்த கட்டுரைசூரியனுக்கே சென்ற தமிழன்!!!!!!!!!