விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
விழாவில் வண்ணதாசன் பற்றிய நூல் ஒன்றும் அவரைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் என்னும் ஆவணப்படமும் வெளியிடப்படும்
முந்தையநாள், 24-1-2016 சனிக்கிழமை காலைமுதல் நண்பர்கள் வந்துகூடுவார்கள். கோவை குஜராத்திபவனில் வரும் அனைவருக்குமே தங்குமிடம், உணவு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. காலைமுதலே இலக்கியச்சந்திப்புகளும் படைப்பாளிகளுடன் உரையாடலும் நிகழும். பல எழுத்தாளர்கள் என் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வருகை தருகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிகமாக வாசகர்கள் விரும்பினால் படைப்பாளிகளுடன் தனியுரையாடலும் நிகழ்த்தலாம்
அனைத்து நண்பர்களையும் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் அழைக்கிறேன். வருகை தந்து கௌரவிக்க வேண்டுமென கோருகிறேன்
ஜெயமோகன்
குஜராத்தி சமாஜ்:
662, மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, கோவை – 641002
Location: https://goo.gl/maps/
பாரதிய வித்யா பவன்:
582, டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை – 641002
Location: https://goo.gl/maps/
மேலும் விபரங்களுக்கு:
9597633717
9965846999