ஜெயமோகனின் தளத்தில் “திதலையும் பசலையும்” கட்டுரை படித்தேன்:
திதலை – பொன்னின் பிதிர்வு போன்ற புள்ளிகள்.
தித்- என்ற சொல்லுக்கு (பொன் போன்ற) புள்ளி என்ற பொருள்.
தித்திரம் – அரத்தை (1) Galangal, shrub, Alpinia (2)Big galangal
http://rareplants.net.au/shop/edible/alpinia-galanga/
தித்திரப் பூ (= அரத்தைப் பூ) திதலையால் அடைந்த பெயர்.
புள்ளிகள் உடலெங்கும் கொண்டவை கவுதாரிகள் (செந்தமிழ்ப் பெயர்: கதுவாலி).
எனவே, தித்திரி என்று கவுதாரிக்கு ஒருபெயர். மீன்குத்திக்கு தைத்திரம் (< தைத்தல் = மீன்குத்துதல்)
எனப் பெயர். மீன்குத்தியால் தைத்திரீயம் என வேதம், உபநிஷதப் பேர்களுண்டு. மீன்குத்தி
என்று அறியாமல் 19-ஆம் நூற்றாண்டில் வெள்ளைக்காரர்கள் தைத்திரீயத்தை கவுதாரியுடன்
பொருத்தியுள்ளமை பிழை. தைத்திரம் தைத்தல் என்னும் த்ராவிடதாது தரும் சொல். மீன்குத்தி எனப் பொருளுடையது.
https://groups.google.com/forum/#!msg/mintamil/4SqFSY7AWlw/aSpfPCW1AwAJ
கதுவாலிகள் (பேச்சுத்தமிழில் கவுதாரி, by metathesis) போலவே திதலை உடையவை காடைகள் (Quails).
இவற்றை “இதல்” என்கின்றன சங்கச் சான்றோர் செய்யுள்கள். இதல் < திதல் என முன்பு விளக்கியுள்ளேன்.
https://groups.google.com/forum/#!msg/mintamil/QRv4Oqr57QQ/oK2E-By8BwAJ
திதல்- > சிதல்- என்றும் மாறும். சிதர் = Pollen of flowers; பூந்தாது. (பிங்கலந்தை). பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை பதிப்பு
Powder; பொடி. (பிங்.) , பொற்பொடி தூவினாற்போல் உள்ள துணி, பொன்வண்டு, சிச்சிலி.
சிதர் சிதலை என்றும் இலக்கியங்களிலே உண்டு.
திதலை போல் உள்ளதால் கறையான், ஈசல் இவற்றுக்கு சிதல் எனப் பெயர்:
சிதல் cital , n. < id. [T. ceda, K. gedalu, M. cital.] 1. Termite; கறையான். சிதல் மண்டிற் றாயினும் (நாலடி, 147). 2. Flying white ant; ஈசல். (பிங்.)
திதலை திதனி என்றும் வரும்.
திதனி titaṉi, n. See திதலை, 1. ஆகத்தா ரெழிற் றிதனி (கலித். 14).
திதலை titalai, n. perh. sita. 1. cf. sidhma. Yellow spots on the skin, considered beautiful in women; தேமல். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145). 2. Pale complexion of women after confinement; ஈன்ற பெண்களுக் குள்ளவெளுப்புநிறம். ஈன்ற வடிதலைபோல் (கலித். 32). (MTL)
——————————
புராணத் திருமலைநாதர், மதுரைச் சொக்கநாதர் உலா:
புதிய மணிமுடிமேற் பொற்பே ரொளியின்
திதலைத் திருவாசிச் சேவை – உதயகிரி
( திதலை – பொற்பிதிர்வு. உவேசா குறிப்புரை)
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0439.html
————————–
பழனி திருவாவினன்குடி பற்றித் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்:
மென்மொழி மேவலர் இன்னரம்(பு) உளர,
நோயின் றியன்ற யாக்கையர், மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர், இன்னகைப்
- பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்,
அடி-151: மாசு இல் மகளிரொடு – (உடம்பிலும், குணத்திலும்) யாதொரு குற்றமும் இல்லாத கந்தருவ மாதரோடு கூடி (‘இன் நரம்பு உளர’ என மேலே கூட்டுக.)
அடி-147: நோய் இன்று இயன்ற யாக்கையர் – (தேவர் ஆதலின்) மக்கள் யாக்கை போல நோய் உடையன ஆகாது. நோய் இல்லனவாய் அமைந்த உடம்பினையும்.
அடி-147, 148: மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் – மா மரத்தினது விளக்கமான தளிர்களை ஒத்த நிறத்தினை யுடையவரும்.
அடி-148, 149: அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் – விளங்குந்தோறும் பொன்னை உரைத்த உரை விளங்குதல் போலக் காணப்படுகின்ற தேமலையுடையவரும்.
கச்சிக் கலம்பகம்:
குருகு நெகிழுந் திறநவில்வாய்
கழிசேர் குருகே குருகழியக்
கொங்கை திதலை பூப்ப வுளங்
குலைந்தே யுடைய வுடைசோரப்
கொங்கை திதலை பூத்தல் – தனங்களில் பொன் போன்ற தேமல் பூக்க
இ.வை. அனந்தராமையர், கலித்தொகை,
பாலைக்கலி:
(29) தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி (1)
னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற்
பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம்
புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர
வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள (5)
விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார
மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ
லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர
மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்;
நச்சினார்க்கினியர்:
”கருப்பந் தங்கிய காலத்துப் பிறக்கும் வேட்கையாகிய நோய் இளமைக்காலத்து அழகைக் கெடுக்குமளவன்றி மிகவருத்துகையினாலே அதற்கு அலமந்த சுற்றத்தார், பின்னர் அவள் மெய்ந்நோக்காடு கண்டு வருத்தமுறும்படி புதல்வனையீன்றவள், அப்புதல்வனைக்கொண்டு அக்குடியையெல்லாம் பாது காத்துக்கிடந்த கிடக்கைபோல, தன்னிடத்துப் பயிரையுண்டாக்கின உழவர், தனக்கு இடையில் வந்த நோய்க்கு வருந்திய வருத்தம் நீங்கும்படி, தான் ஈன்ற உணவுகளைக்கொண்டு குடிமக்களையெல்லாம் பாதுகாத்த உலகம், அவள் தன்னைப்புல்லிய ஈன்றணுமை தீர்ந்து புதுநலம் பெற்றாற் போல, தான் ஈன்ற பசுமை தீர்ந்த புதிய அழகு தோன்ற, வளையினையுடைய இளையோர் இழைத்த
வண்டற்பாவையும் பூவுங் கலந்துகிடந்தாற்போல வார்ந்த மணல் பூக்கள் உதிர்ந்துகிடந்த வடுவைத் தன்னிடத்தே கொள்ள, இளையமகளிருடைய மயிர்போல இடுமணலை ஊடறுத்தலையுடைய நீர் ஒழுக, மாமை நிறத்தையுடையவள் திதலைபோல மாவீன்ற சிறிது முற்றின தளிரின் மேலே அழகிய இதழையுடைய பல மலர்களினுடைய வியக்கத்தக்க தாதுகள் உதிர்தலைச்செய்ய, பெருமை பொருந்த இளவேனிற்காலம் வந்துவிட்ட பொழுதின்கண்ணே; எ – று.”
நச்சினார்க்கினியர் உரையால் மா நிறத்தவள் மேலே பல மலர்களின் பொன்னொத்த மகரந்தப்பொடி தூவினாற்போல
திதலை இருந்தது எனப் புரியும். மேலும் அரத்தை மலருக்கு (Alpinia Galangal) தித்திரம் என்ற பெயரும், காடைக் குருவிகளுக்கு (Quails) இதல் < திதல் என்னும் சங்கப்பெயரும், தித்திரம் எனக் கதுவாலி (Partridge)யின் பெயரும் நான் சொல்வதி விளக்கும்.) இடையாற்றுமங்கலம் வை. அனந்தராமையர் குறிப்புகள் திதலை பற்றி அறியப் பயனுடையவை. இ.வை.அ. எழுதுகிறார்:
“3. (அ) “மாவின், றளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத், தீர்க்கி னரும்பிய திதலையர்” மது. 706 – 8. (ஆ) “ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும்” (இ) “மாயவண் மேனிபோற் றளிரீன வம்மேனித், தாய சுணங்குபோற் றளிர்மிசைத் தாதுக” கலி. 32 : 7, 35 : 3 – 4. என்பவையும் (ஈ) “பூத்ததைந்த தாழ்சினைத் தளிரன்ன வெழின்மேனி தகைவாட” கலி. 40 : 19 – 20; என்றவிடத்து “பூத்தாழ்ந்த தளிரெனவே சுணங்கும் மாமை நிறமுங் கூறிற்று” என்றெழுதியிருக்குமுரையும் (உ) “வண்ணநுண் சுண்ணமாட்டி வளரிளந் திங்களன்ன, வொண்ணுதலொருத்தி மாமை யொழுகுமா மேனி நோக்கும், பண்ணமர் மழலைப் பல்காற் பறவை வீழ்ந் துழுது மென்பூந், தண்ணறுந் தாது துற்றுத் தயங்குசெந் தளிரு நோக்கும்” பாகவதம். (10) கோவியரை. 28. என்பதும் ஈண்டுக் கருதற்பாலன.”
நா. கணேசன்