எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்

images (2)

அன்புள்ள ஜெ,

ருசி கதைக்கு இணைப்பு வழங்கியதற்கு நன்றி. முதல் கதை வாசுதேவன் பிரசுரமான 2013 ஆண்டிலிருந்து இன்று வரை மொத்தம் பன்னிரெண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். இதைத்தவிர ஒரு ஆங்கிலக் கதை எழுதி இருக்கிறேன் (பிரசுரமாகவில்லை, காமன்வெல்த் போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன்). வெற்றி தோல்வி என்றெல்லாம் எனக்குப் பகுக்கத் தெரியவில்லை. அவை வாசகருக்கு உரியது. ஆனால் கதை எழுதுவது மிகுந்த நிறைவை அளிக்கிறது, சில வேளைகளில் கொந்தளிப்பை அளிக்கிறது. என்னை நானே கண்டுகொள்கிறேன். இந்த சுட்டியும் கவனமும் தொடர்ந்து கதைகளை புனைய தூண்டுதலாக இருக்கும். இத்துடன் இதுவரை எழுதிய பன்னிரண்டு கதைகளின் சுட்டிகளை உங்களுக்கு அனுப்புகிறேன். தளத்தில் இட வேண்டும் என்றில்லை. நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்றறிய ஆவல். வேறு சில நண்பர்களுக்கும் அனுப்பியிருந்தேன். வெவ்வேறு கருத்துக்கள் கிடைக்கின்றன. புனைவெழுத்தாளனாக என்னை சுயமதிபீடுசெய்து கொள்ள உதவியாக இருக்கும்.

1.திருமிகு பரிசுத்தம் –https://padhaakai.com/2016/07/24/mr_parisuttam/

4.அம்புபடுக்கை – https://padhaakai.com/2015/12/27/bed-of-arrows/
5.இங்கர்சால் – https://padhaakai.com/2014/09/21/ingersoll/
6.நாற்காலி – https://padhaakai.com/2014/07/27/the-chair/
7.குருதி சோறு –
9. வாசுதேவன் – http://www.jeyamohan.in/38230
10. காலிங்க நர்த்தனம் – http://solvanam.com/?p=37324
11. ஆரோகணம் – http://solvanam.com/?p=33741
நன்றி
சுனில்
முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49
அடுத்த கட்டுரைமோகினி