சிறுகதைகள் கடிதங்கள் 16

IMG_1206

 

வணக்கம்.

 

தங்களின் வார்த்தைகள் என்னை என் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. வேறேதும் சொல்ல இயலவில்லை.

 

எத்தனையெத்தனை அலுவல்களுக்கு மத்தியில் பதினைந்து கதைகளை எடுத்துக் கொண்டு இத்தனை நீளமான விமர்சனமும் அது தொடர்பான சங்கதிகளையும் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்த தங்களுக்கு அத்தனை எழுத்தாளர்களின் சார்பாகவும் நன்றி என ஒற்றை பதத்தை சமர்ப்பிக்கிறேன்.. உளமார.

 

அன்புடன்

கலைச்செல்வி.

 

 

ஜெ

 

சிறுகதைகளை வாசித்தேன். பலகதைகளைப்பற்றி நான் என்ன நினைத்தேனோ அதையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். விதிவிலக்கு, அனோஜனின் அசங்கா நீங்கள் சொன்னதைவிடவும் எனக்குப்பிடித்திருந்தது. அதிலே இன்றையதலைமுறையின் சிக்கல் இருக்கிறது. பாலியல் மீறல் ஒருகொண்டாட்டம். ஆனால் அதை குற்றவுணர்ச்சியில்லாமல் கடந்துசெல்லவும் முடியவில்லை

 

அதேபோல ராம் செந்திலின் கதை நீங்கள் சொன்ன அளவுக்கு என்னைக் கவரவில்லை. சாதாரணமான கதை. அதிலே இத்தனைநுட்பங்களை வாசிப்பதென்றால் எல்லா ஃபேஸ்புக் பதிவுகளிலும் இதைப்போல பல நுட்பங்களை கண்டுபிடிக்கலாம். அந்தக்கதை ஒரு சின்ன சம்பவத்தைத்தான் சொல்கிறது

 

இபப்டிச் சொல்கிறேனே, ஒரு விஷயத்தை உண்மையாக நிகழ்ந்ததை அப்படியே எழுதுபவன் எழுத்தாளனே அல்ல. அவன் வெறும் கிரோனிக்கிலர். அவன் முழுக்கமுழுக்க கற்பனையால் ஓர் உலகத்தைப்படைக்கும்போதுதான் கலைஞன். அத்தகைய கற்பனை எந்தக்கதையில் இருக்கிறது என்பதுதான் அளவுகோல்

 

அந்த அளவுகோலின்படிப்பார்த்தால் அனோஜனின் கதையும் கலைச்செல்வியின் கதையும் தான் முக்கியமானவை

 

ராஜாராம்

 

ஜெ

 

உங்களை பெண்கள் எழுதுவதற்கு எதிரானவர் என்று ஒரு பேச்சு இணையத்திலே ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே இந்தக் கதைகளில் 2 கதை பெண்கள். பெண்கள் விமர்சனத்திலும் ஆக்கபூர்வமாகப் பங்கெடுத்திருக்கிறர்கள். நீங்கள் படம்போடவில்லை என்றால் இவர்களெல்லாம் ஆண்கள் என்று சொல்லியிருப்பார்கள். நீங்கள் அந்தப்பெண்களுக்குப் பாவம் பெண்கள் என்று எந்தக்கருணையையும் காட்டவில்லை. கறாராகவே அணுகியிருக்கிறீர்கள். அதுதான் உங்களை பலர் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருக்கிறதென நினைக்கிறேன்

 

பா.சுரேஷ்

 

ஜெ

 

பதினைந்து கதைகள். அவற்றுக்கு இவ்வளவுபெரிய கவனமும் வாசிப்பும் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் இந்த எழுத்தாளர்கள் இன்னமும் கவனமாக எழுதியிருப்பார்கள். பலர் அதையே சொல்லியும் எழுதியிருந்தார்கள். இது மிகமுக்கியமானா விஷயம். இன்று கவனமில்லாத எழுத்து மிகவும் பெருகிவிட்டது. எந்த மறுவாசிப்பும் இல்லாமல் அச்சாகிவிடுகிறது. முன்பு 200 காபி அச்சிட்ட பத்திரிகைகளில் எழுதும்போது இந்த நிலை இருக்கவில்லை என்று நீங்களே சொல்கிறீர்கள்

 

நம்முடைய பழைய கல்சிலைகளைப்பார்த்தால் எத்தனை கவனமாக திட்டமிட்டு கலையை உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று புரியும். அதை எவர் பார்ப்பார்கள் என்ரெல்லாம் அவர்கள் கவலைப்பட்டதே இல்லை. கலையை உருவாக்கும் மனநிலை அதுவாகவே இருக்கவேண்டும். அதை இந்த இளம் எழுத்தாளர்கள் படிக்கவேண்டும். அவர்கள் எழுதுவதை மௌனி எழுதிய மொழியிலே அவர்கள் வைக்கிறார்கள் இல்லையா?

 

ப்ரியம்வதாவின் குறிப்புகள் மிகக்கூர்மையாக இருந்தன. இத்தனை கவனமாக அந்த எழுத்தாளர்கள் எழுதவில்லை. இந்த 15 கதைகளில் கவனமாக எழுதாமல் இன்னொருமுறை திருப்பி எழுதாமல் தோற்றுப்போன கதைகள் பல.  தச்சன், மனிதகுணம், அசங்கா போன்ற கதைகளை சிறப்பாக எழுதியிருக்கமுடியும்

 

ராமச்சந்திரன்

===================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

சிறுகதைகள் என் பார்வை 6

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

 

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசின் ஒலிவடிவம்
அடுத்த கட்டுரைபடைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?