சிறுகதைகள் கடிதங்கள் -15

 

images

 

அன்புள்ள ஜெ

 

இந்தச்சிறுகதை விவாதத்தின் உச்சம் என்பது பிரியம்வதா எழுதிய விரிவான வாசகர்குறிப்புகள்தான். இத்தகைய வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்பது தமிழில் எழுதும் அத்தனைபேருக்கும் எச்சரிக்கைபோல.மிகக்கூர்மையான அவதானிப்புகள். பிரியம்வதா தமிழில் நிறைய எழுதவேண்டும் [அதேபோல கொற்றவை பற்றி எழுதியிருந்த சுசித்ரா. என்ன ஒரு தெளிவான நடை. ஆழமான பார்வை!]

 

சுவாமி

 

சுசித்ரா கடிதங்கள்

பிரியம்வதா விமர்சனங்கள்

*

 

அன்புள்ள ஜெ

சிறுகதைகளைப்பற்றிய  உங்கள் மதிப்பீடுகளை வாசித்தேன். அவற்றின் விரிவான விவாதத்தன்மை அசரவைத்தது. விவாதங்களை உண்டுபண்ணுகிறார், பிரபலம் அடைவதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்று முகநூலில் ஒருகும்பல் கத்திக்கொண்டே இருக்கும். நான் அவர்களிடம் சொல்வதெல்லாம் அவர் உருவாக்கும் விரிவான விவாதங்களைப் பாருங்கள். அவர் என்னென்ன கேள்விகளை எழுப்புகிறார் என்பதைக் கவனியுங்கள் என்பதுதான். அவர் எழுதுவதிலுள்ள பொறுப்புணர்ச்சியும் கவனமும் உழைப்பும் பத்துசதவீதமேனும் இருந்தால் குறைசொல்லுங்கள். இல்லாவிட்டால் அவர் சொல்வதைக் கவனித்து சொல்வதற்கு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றுதான்.

இந்தக்கட்டுரைகளில் அனேகமாகச் சிறுகதை எழுதுவதைப்பற்றிய எல்லா விஷயங்களுமே பேசப்பட்டுவிட்டன. இருகோணங்களில் சிறுகதை விவாதம் விரிந்தது. ஒன்று சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைநிறைகள். இன்னொன்று பொதுவாகச் சிறுகதை என்னும் வடிவத்தின் சாத்தியக்கூறுகள் பிரச்சிப்பாடுகள். சமீபத்தில் சிறுகதைபற்றி இவ்வளவுபெரிய ஒருவிவாதம்நடந்ததே இல்லை.

வாழ்த்துக்கள் ஜெ.

 

சத்தியமூர்த்தி

 

*

அன்புள்ள ஜெமோ

 

ஒரு கட்டுரையில் நீங்கள் இலங்கையின் நாவலாசிரியரான சயந்தனின் ஆதிரை நல்ல நாவல் என்று சொன்னீர்கள். அங்கே ஒருகூட்டம் அவரை பின்னி எடுத்தது. அவர் உடனே உங்களை திட்டி ஒரு பதிவுபோட்டு நான் ஜெயமோகனுக்குக் கடிதம்கூட அனுப்பியதில்லை என்று மன்றாட ஆரம்பித்துவிட்டார். இதுதான் சூழல். விரிவாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். அதிலுள்ள பொறுப்பும் அக்கறையும் பிரமிக்கவைக்கின்றன. ஆனால் எத்தனைபேர் உங்கள் நேர்மையான எண்ணத்தைக் கருத்தில்கொள்வார்கள் என்று தெரியவில்லை

 

ஜெயராஜ்

 

*

 

அன்பின் ஜெயமோகன்,
இத்தனை வேலைகளின் நடுவில் சிறுகதைகள் பற்றிய உங்களின் மதிப்பீடுகள் பிரமிக்க வைக்கின்றன.
தனிப்பட்ட ஓர் இழப்பில் இருந்ததால் சில நாட்களாக இணையத்திற்கு வரவில்லை.இன்று தான் என் சிறுகதை பற்றிய உங்கள் விமர்சனத்தையும்  ,சிறுகதைகள் பற்றி நீங்கள் அறிமுக எழுத்தாளர்களுக்கு அளிக்கும் வழிகாட்டுதல்களையும் வாசித்தேன்.
சிறுகதைகள் பற்றிய இத்தனை விரிவான இலக்கிய மதிப்பீடுகள் சமீபத்தில் இதுதான் என்று எண்ணுகிறேன்.உங்களின் குறிப்புகள் எனக்கு எழுதுவதை பற்றிய தெளிவைத் தருகின்றன.மிக்க நன்றி.
எனது கதையையும் இத்தளத்தில் இத்தனை விரிவாக நுணுக்கமாக விமர்சித்தது எனக்கு உண்மையில் மகிழ்வாக உள்ளது.நீங்கள் குறிப்பிட்டது போல வாசக எதிர்வினைகள் அற்ற சூழலில் ஒரு முக்கிய இலக்கியவாதி என் கதையை முழுமையாக வாசித்து அதன் நடை,மற்றும் குறைகளை விமர்சித்திருப்பது எனக்கு இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.
உண்மையில் அந்த சுட்டியை அனுப்பிய பிறகே வேறு கதைகளை அனுப்பியிருக்கலாம் என்றே எண்ணினேன்.கடைசியாக வெளிவந்த சிறுகதை என்பதால் அனுப்பிவிட்டேன்.இத்தனை விரிவான விமர்சனங்கள் வரும் என்று தெரியவில்லை.யோசித்து வேறு கதையை அனுப்பியிருப்பேன்

 

தச்சன் கதை எதோ ஒரு உணர்வில் எழுதியது.தொன்மங்களை மறு ஆக்கங்கள் செய்வது பற்றிய உங்கள் கருத்துகளை முழுமையாக நான் ஏற்கிறேன்.அக்கதை எங்கு விலகிச்சென்றது என்றும் தெரிகிறது.மக்தலீன் பார்வையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.இன்னும் சரியாக,விரிவாக சில உணர்வுகள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.முழுமையடையாத கதை என்று தெரிகிறது.இது பற்றியெல்லாம் நீங்கள் எழுதியதால் தெளிவான பார்வை எனக்கும் கிடைக்கிறது.நன்றி.

 

இக்கதை பற்றி குறிப்பிட்டு எழுதிய அனைவருக்கும் நன்றி.எல்லா விமர்சனங்களும் எப்படி எழுதக்கூடாது என்பதை பற்றிய நல்ல கோணத்தை தருகின்றன.
சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் விரிவான விளக்கங்கள் எனக்கு நிறைய தெளிவைத் தருகின்றன.
நன்றி
மோனிகா மாறன்.
*

 

ஜெயமோகன் அவர்களுக்கு

 

கதைகளை முழுமையாக வாசித்தேன். முதிர்ச்சியில்லாத எழுத்து என்று எனக்குத் தோன்றும் கதைகள் இவை. . சதீஷ்குமாரின் 10.5. அவர் சயன்ஸ்ஃபிக்‌ஷன் என்றால் சுஜாதக்கதை என நினைக்கிறார். கொஞ்சம்கூட சுவாரசியமே இல்லை. மாறிமாறி அவன் இவன் என்று கதாபாத்திரங்கள் வெவ்வேறுகோணத்தில் ஒரு சின்ன விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதைச் சொல்கிறார்

 

மகேந்திரனின் யாதும் காமமாகி ஒருவகையிலும் எழுத்தில் சேர்த்தி இல்லை. முதலில் நல்ல கதைகளை அவர் வாசிக்கவேண்டும். அத்துடன் கதை என்றால் அது கதைதான் என்பதைப்புரிந்துகொள்ளவேண்டும். நினைப்பதை எல்லாம் எழுதினால் அது கதை அல்ல

 

மு.தூயன் எழுதியது சாதாரணமான முடிச்சுக்கதை. இந்தமாதிரி கதைவாசகர்களை நான் முடிச்சவிக்கிகள் என்ரு சொல்வதுண்டு. இதையெல்லாம் எழுதக்கூடாது என்று அறிவதற்கு ஒரு மெச்சூரிட்டி தேவை. அதைவிட வாசிப்பவன் அறிவுள்ளவன் என்னும் மரியாதையும் தேவை.

 

ஆனந்த்குமார்

 

ஜெ

இந்த வரிசையில் தரமான கதைகள் 2 தான். அதாவது வடிவமும் நடையும் கூடிவந்த கதைகள். வாசகனுக்கு ஒரு புதிய அனுபவம் அளித்தவை

  1. வாட் எ வண்டர்புல் வேர்ல்ட் – சிவா கிருஷ்ணமூர்த்தி
  2. பருவமழை-தருணாதித்தன்

சுமாரான கதைகள்

1 அசங்கா – அனோஜன் பாலகிருஷ்ணன்

2 மஞ்சுக்குட்டி -கலைச்செல்வி

 

பலவீனமான கதைகள். அதாவது சரியான கரு அமையாமல் சாதாரணமாக ஆகிவிட்ட கதைகள்.

 

  1. மனிதகுணம்- தருணாதித்தன்
  2. ருசி- சுனீல்கிருஷ்ணன்
  3. தச்சன் மோனிகா மாறன்

4  விடிவு – காளிப்பிரசாத்

5 மடத்துவீடு- ராம்செந்தில்

 

எழுதவே தெரியாமல் சொதப்பிய கதைகள்

 

  1. 10.5 சதீஷ்குமார்

2  யாதும் காமமாகி – மகேந்திரன்

3  தில்லையம்மா- தூயன்

4  பாம்புவேட்டை கே ஜே அசோக்குமார்

 

இரண்டு கதைகளை எங்கும் செல்லாமல் நடுவே நின்று போனவை என்று சொல்லலாம்

1 முடி – மாதவன் இளங்கோ

2 புத்தரின் கண்ணீர் – உதயன் சித்தாந்தன்

 

ரமேஷ்

 

 

===================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

 

 

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
அடுத்த கட்டுரைஎன் உரைகள், காணொளிகள்