சோழன், கடிதங்கள்

வணக்கம் ஜெ

தங்களுடைய தஞ்சை கட்டுரையைப் படித்துவிட்டு திரு விஜய்வீரப்பன் சுவாமிநாதன் அவர்கள் எழுதிய கடிதத்தில் ” அதே போல் இந்தக் கோவிலின் தலப் (அஜித் அல்ல) புராணத்தின் படி, ஒரு சிறு யானைக் கூட நுழைய முடியாத கற்பகிரகம் வேறு எங்கும் கிடையாது. ஆனால் இவை அனைத்தும் வெளியே தெரிவதில்லை. எனக்கு தெரிந்து இணையத்தில் கூட (நிறைய பேர் எழுதுவதால்) யாரும் எழுதுவது இல்லை” என்று எழுதியிருந்தார்.

அதுகுறித்து ஒரு கூடுதல் தகவல், தங்களுக்குத் தெரிந்திருக்கும். யானை நுழைய முடியாத வகையிலான மாடக்கோயில்கள், திருவானைக்காவல் கோயில் உட்பட பல உண்டு. இவற்றை நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழன் கட்டினார். அவற்றின் பட்டியலையும் இணையத்தில் பார்க்கலாம்.

அன்புடன்
சிவா
கோவை

திரு ஜெய மோகன்

தங்கள் மறுமொழி (ராஜ ராஜ சோழன் மாமன்னனா ) உங்கள் தளத்தில் கண்டேன். தங்கள் ஆராய்வதற்கு ஏதுவாக ஆகமங்களில் ஒவ்வொரு குலத்தவருக்கும் நிலத்தைப் பகுப்பது தொடர்பான பகுதியை உங்களுக்கு இத்துடன் இணைப்பாக அனுப்பியுள்ளேன். (காமிக ஆகமம்). கிரந்தத்தில் மூலமும் , தமிழில் பதவுரையும் உள்ளது.

வேங்கடசுப்ரமணியன்

Dear J.

Your article about “RajaRajan’s True Legacy” was interesting to me in more than one aspect. As someone hailing from Sri Lanka, I had to look at it in a different angle. One of the biases that the Tamils of Sri Lanka had to endure was, that we all came to Sri Lanka as part of the Chola Army. And, the Chola Army is always accused, by the majority Sinhala race, of destroying Buddhism and it’s shrines in Sri Lanka ( The then capital region of Anradhapura and adjoining Polonnaruwa districts were the favored targets of Chola development. The Sinhala ruler of the time, took the “tooth relic” and moved to Kandy in the Hill countries). During Chola period, Polonnaruwa (Pulasthi Nagar)became the most important city in the entire island. The archeological remains of “1st and 2nd Sivalayas” constructed by RajaRajan and Rajendran in Polonnaruwa are still a tourist attraction, and bear witness to the ingenuity of the Chola Architecture even though these temples had been abandoned and completely neglected in the later periods. The problem is that while the Tamil history propounds that both RajaRajan and Rajendran patronized all religions without discrimination and made grants to all temples regardless of religious affiliation, Mahavamsa is unequivocal in condemning the Chola reign and its destructive effects on Buddhism! To be fair, Mahavamsa is a summary of legends, boasts and biases; but it is also a meticulously recorded history of the times of Sinhalese Kings (yes, it is possible to be both at the same time). Up to now, I have always dismissed the Mahavamsa version of events, but I have a problem now.

My problem is this: From your article “Kanthaloorcholaiyin Kalaignan” ( http://www.jeyamohan.in/?p=9174, it is proven beyond any doubt that RajaRaja had no tolerance to any deviation from his ideas of Agamic rituals. This is the king who suppressed religious freedom in Kerala. I also happen to know that this is the king who expelled his own citizens from Tanjavoor in order to settle the Brahmins he had specially brought down from the Northern India. This is also the king whose troops had earned through their reckless behavior, a bad name for themselves in Thailand that lasts to this day! How can we believe that he was a protagonist of worship in all its forms?. Yet, this is also the king who allotted land gave material help to the King of Java to build a Buddhist temple in Tamil Nadu!. Isn’t there two irreconcilably different descriptions of the same King is being presented to us in history books or is this a “Dr.Jekyll and Mr.Hyde” transformation by the same king?

Sincerely

Theiventhiran Kanthia

Montreal, Canada

அன்புள்ள தெய்வேந்திரன்

நான் ஆய்வாளனுடைய இடத்தில் நின்று இதைப்பற்றி விரிவாகப் பேசமுடியாது. நான் ஆர்வமுள்ள வாசகன் மட்டுமே. இந்த விஷயத்தில் என்னுடைய எண்ணங்களைச் சொல்கிறேன்.அவற்றை உங்கள் தரப்புடன் இணைத்து நீங்கள் யோசிக்கலாம்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல ராஜராஜன் இன்றைய ஜனநாயக யுகத்தின் ஆட்சியாளன் அல்ல. அவன் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் ஆட்சியாளன். நாடுபிடித்தலும் ஒற்றைமைய ஆட்சியை உருவாக்குதலும் உபரியை மையத்தில் தொகுத்தலும் அந்த உபரியைக்கொண்டு சமூக முன்னேற்றத்துக்கான அமைப்புகளை உருவாக்குதலும்தான் உலகமெங்கும் நிலப்பிரபுத்துவத்தின் வழிமுறைகள். இதற்கு விதிவிலக்காக இருந்த எந்த மன்னனும் இல்லை.

ராஜராஜன் மட்டுமல்ல எந்த சோழ மன்னன் ஆட்சிக்கு வந்தாலும் பாண்டிய மன்னர்களை வென்று அவர்களின் அரியணையில் அமர்ந்து முடிசூடிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. பாண்டியர்கள் எதிர்த்தார்களென்றால் அவர்களை அழித்து அரண்மனைகளையும் நகரங்களையும் எரித்து சாம்பலாக்கினார்கள். சோழர்களின் மெய்கீர்த்திகளில் அவர்கள் எப்படியெல்லாம் சேர, பாண்டிய மன்னர்களை அழித்தனர் என்ற வர்ணனை இருக்கிறது. ராஜராஜசோழன் குமரிமாவட்டத்தின் இரணியசிங்கநல்லூரை ஆண்ட பாஸ்கர ரவிவர்மனை கொன்று நகரை கொளுத்தியழித்தான் என்றே கல்வெட்டுகள் சொல்கின்றன.

அதாவது சோழர்களை இன்றைய காலகட்டத்தில் வைத்துப்பார்க்கக் கூடாது. அவர்களின் மெய்கீர்த்திகளை வைத்துப்பார்த்தாலே அவர்கள் வென்ற நாடுகளை எரித்ததையும் நகரங்களை அழித்ததையும் நாம் காணலாம். தமிழகத்துக்குள்ளேயே இந்த அழிவுகளைச் செய்தவர்கள் இலங்கையிலும் கடாரத்திலும் கண்டிப்பாபக அதைச் செய்திருப்பார்கள். சேரநாட்டினனான நான் ராஜராஜன் எங்கள் ஊர் மன்னனை வென்று அழித்ததை எண்ணி இன்று கோபம் கொள்ளுவதில் பொருள் இல்லை. அது அக்கால அரசியல்.

அவ்வாறு வென்று வந்த பேரமைப்பே அவனுக்கு பெரும்செல்வத்தை அளித்தது. அந்தச்செல்வமே தமிழகத்தில் ஏரிகளாக, விளைநிலங்களாக, கோயில்களாக ஆகியது. அவர்களின் படையெடுப்புகளின் அழிவுகளும் ஆதிக்கத்துக்கான போர்களும் ஒருபக்கம். மறுபக்கம் இந்த ஆக்கப்பணிகள். இரண்டையும் அக்காலகட்டப்பின்னணியில் வைத்துப்பார்க்கவேண்டும் என்றே நான் எழுதினேன். அதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் மீண்டும் அவர்களை இந்தக்காலகட்ட மதிப்பீடுகளுக்குள் போட்டுப்பார்க்க முயல்கிறீர்கள்.

ராஜராஜனை அவன் காலகட்டத்தின் பிற நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுடன் ஒப்பிடவேண்டும் என்றே நான் சொல்வேன். அவன் மன்னர்களை வென்றிருக்கிறான். ஆனால் கோடிக்கணக்கில் எளிய மக்களை கொன்று குவித்திருக்கவில்லை. அவன் நாடுகளை கைப்பற்றியிருக்கிறான். ஆனால் வென்றநாடுகளில் நிலையான ஆட்சியை உருவாக்கி பெரும் நலப்பணிகளைச் செய்திருக்கிறான். சேரநாட்டின் பெரும் ஏரிகள் அவன் வெட்டியவையே. .

ஈழத்தில் ராஜராஜன் பௌத்த மத அமைப்புகளை அழித்திருக்கலாம். இன்றுபோலவே அவை அன்றும் அங்குள்ள அரச அதிகாரத்தின் மையங்களாக இருந்திருக்கலாம். ஆனால் அது மதக்காழ்ப்பின் விளைவு அல்ல. அவன் சூடாமணி விகாரம் போன்ற பௌத்த விகாரங்களை கட்டியிருக்கிறான். இன்றும் சோழர்களின் ஆலயங்களின் சுவர்களில் புத்தர்சிலைகளை நாம் காணமுடிகிறது

இந்த விழுமியங்கள் அக்கால அளவுகோலுக்கு முக்கியமானவை, அபூர்வமானவை. அந்த அளவிலேயே அவனை மாமன்னன் என்கிறோம். இதுவே என் தரப்பு

ஜெ

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

ராஜராஜன் – கடிதங்கள்

ராஜராஜன் மேலும்கடிதங்கள்

முந்தைய கட்டுரைகவி சூழுலா 2
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது, விழா