அன்பு ஜெயமோகன்,
உங்கள் கடிதம் கண்டேன். என்னுடைய தந்தையைப் பற்றி இதற்கு முந்தைய கடிதங்களில் ஒன்றில் கூறியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடன் சனிக்கிழமையன்று ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். அதிகமாக உங்களுக்கு நான் எழுதிய கடிதங்களை பற்றியே பேச்சு சுற்றி வந்தது. என்னைவிட அவர் உங்களை நன்றாக புரிந்துகொண்டுள்ளார் போலிருக்கிறது. “He is honest to his feelings. That’s how a writer should be. Isn’t it?” என்று கேட்டார். கிட்டத்தட்ட அதையேதான் நீங்களும் தெரிவித்திருந்தீர்கள்.
இன்னொரு விஷயம். கடந்த வாரமே நான் எழுதவேண்டும் என்று நினைத்தது. தங்கள் வாசகர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களில் இருந்து ஒன்றை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் தளத்தின் வாசகர்கள் எல்லோருமே தேர்ந்த வாசகர்களாக இருக்கிறார்கள். அனைவருமே நன்றாகவும் எழுதுகிறார்கள்.
தங்களுடைய வாசகி லோகமாதேவியை நிச்சயம் அறிவீர்கள். உங்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னைஅறிந்துகொண்டிருக்கிறார். பொள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அவர், “ஜெயமோகன் இல்லாத நாட்கள் எனக்கில்லை” என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளுமளவிற்கு தங்களின் அதிதீவிர வாசகி. கடந்த வாரம் அவர் என்னுடைய “முடி” என்கிற சிறுகதையை வாசித்துவிட்டு அதைப் பற்றி விமர்சனம் எழுதி அனுப்பினார். அதைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் அந்தச் சிறுகதையையும் தங்கள் வாசிப்புக்கு இணைத்துள்ளேன்.
கதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதற்காக அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு சிரத்தையுடன் நீண்ட விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளது ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.
முடி – மாதவன் இளங்கோ சிறுகதை
அன்புள்ள ஜெமோஅவர்களுக்கு,