அன்புள்ள ஜெயமோகன்,
ஸன்டே இன்டியன் இதழில் [ டிச 1- டிஸ 7] அரிந்தம் சௌதுரி எழுதிய தலையங்கம் வாசித்தீர்களா? ஏனது இந்தியா என்ற கட்டுரையில் நீங்கள் நம்முடைய இதழாளர்களைப்பற்றிச் சொன்ன அதே விஷயங்களை இன்னும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.குறிப்பாக ‘ பயங்கரவாதிகள் கையும் களவுமாக பிடிபட்டபோதும்கூட குருட்டுத்தனமாக முஸ்லீம் தீவிரவாதத்த்ய்க்கு ஆதரவு தெரிவிப்பது தங்களை மதசார்பற்றவரக்ள் என்று காண்பித்துக்கொள்ளும் ஒரு மாயையை பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு வழங்குகிறது. முஸ்லீம் தீவிரவாதிகள் போன்றவர்களை ஆதரிப்பதையே தங்கள் தொழிலாக சில ஊடக நிறுவனங்கள் கொன்டிருக்கின்றன. ஏனெனில் உலகில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் அவர்களுக்கு நிதியளித்து போலி அறிவுஜீவிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளில் விருதுகளையும் வழங்குகின்றன’’ என்கிறார்.
சிவராமகிருஷ்ணன்
அன்புள்ள சிவராம கிருஷ்ணன்,
இதழாளர்களைப்பற்றி நான் சொன்னவை எதுவும் துப்பறிந்து கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. ஆவை இதழாளர் அனைவருக்கும் நன்றாக தெரிந்த விஷயங்கள். இப்போது எல்லை மீறிச்செல்வதனால் சில சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்
ஜெ
அன்புள்ள ஜெ,
மும்பை குண்டுவெடிப்புகளைப்பற்றி நீங்கள் ஏதாவது கருத்துச் சொல்வீர்கள் என்று எண்ணினேன். காட்டிக்கொடுக்கும் ஐந்தாம்படை போலவே நடந்துகொண்ட ஊடகங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்
உணர்ச்சிக்கொந்தளிப்பான சந்தர்ப்பங்களில் எழுத்தாளர்கள் மௌனமாக இருபப்தே சிறந்தது
ஜெ