கடிதங்கள்

அன்புள்ள ஜெ.

தீபாவளி வாழ்த்துக்கள்.

சமீபத்தில் Mindmap என்கிற அடிப்படையில் நிறைய மென்பொருள் உபகரணங்கள் வருகின்றன. ஓபன் சோர்ஸ் -இல் (Open souce) Freemind உபயோகமானது. வியாபாரம் நோக்கமின்றி உபயோகித்தால் , விலை ஏதும் இல்லை. பல வேறு இடங்களிலும், இயல்களிலும் சிந்தனைகளிலும் தெரிந்து கொள்ளவும், தெரிவிக்கவும் மிக உபயோகமாக உள்ளது. Java சார்ந்த உபகரணம் என்பதால் மற்ற மென்பொருள்கள் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இணையத்தில் பல வெறும் ‘மனதின் வரைபடங்கள்’ உள்ளன. (சித்தத்தின் என்று இருக்க வேண்டுமோ!)..

அன்புடன்
முரளி

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
சில மாதங்களாக தீவிர மனநிலையிலேயே எழுதிவருவதாக தோன்றுகிறதே. நடையில் கூட நகைச்சுவை குறைந்துவிட்டதற்கு ஏதேனும் பொதுக்காரணம் உள்ளதா?
அன்புடன்,
கு.மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து

எழுதுவது பல்வேறு திசைகளுக்கு இட்டுச்செல்கிறது. திடீரென்று ஏதாவது உந்துதல் ஏற்பட்டால் மட்டுமே நகைச்சுவை

அத்துடன் வேறுபலவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவையும் இக்கட்டுரைகளின் மனநிலையை தீர்மானிக்கின்றன

ஜெ

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
மு.வ பற்றிய என் கேள்விக்கு நெருக்கடியான நேர சூழலிலும் பதிலளித்தமைக்கு நன்றி. வெகுஜன எழுத்து x இலக்கியம் சர்ச்சை பற்றிய பல கேள்வி பதில்களில் தாங்கள் நாசூக்காக மு.வ-வைத் தவிர்த்துவிட்டு பதிலளித்து இருந்ததை கவனித்தேன். நீங்கள் வெகுஜன எழுத்திலிருந்து இலட்சியவாதத்தை (உட்பிரிவாக) பிரித்திருப்பதன் நுட்பம் இப்பொழுது விளங்குகிறது.
அன்புடன்,
கு.மாரிமுத்து

முந்தைய கட்டுரைஆர்வியின் கதை
அடுத்த கட்டுரைஅழகிரிசாமியின் ராஜா