வல்லினம்

கார்த்திக் ராஜாவின் பேச்சு விசித்திரம் நிரம்பியதாய் இருந்தது. சினிமாவின் பரபரப்பு இல்லாமல் மிக எளிதாகப் பேசிக்கொண்டிருந்தார். தனக்கு சுதந்திரம் தராத எந்த நிறுவனத்துடனும் தாம் பணிபுரிய தயார் இல்லை என்றார். காரில் ஏறும்போது நான் “சார், நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டு இத்தனை கறாராக இருந்தால் அதில் வெற்றியடைய முடியுமா” என்று கேட்டேன். கார்த்திக் ராஜாவின் பதில் நான் வாழ்வில் அதுவரை நம்பியிருந்த வெற்றியின் அத்தனை கற்பனைகளையும் சிதைப்பதாய் இருந்தது.

“வெற்றி என்பது ஒன்றல்ல. அது பல வடிவங்களைக் கொண்டுள்ளது. ஒரு சிலருக்கு பணம் சம்பாதிப்பதுதான் வெற்றி. சிலருக்கு புகழ் அடைவது வெற்றி. சிலருக்கு தான் விரும்பும் ஒன்றை மட்டுமே சமரசம் செய்து கொள்ளாமல் செயல்படுத்துவதுதான் வெற்றி. ஓர் உண்மையான கலைஞன் பணத்தையோ புகழையோ வெற்றியாகக் கருதுவதில்லை.”

அந்த இரவு என் வாழ்வில் மிக முக்கியமான தருணம். இசை கலைஞர்கள் மேல் என் மதிப்பு கூடியிருந்தது.
http://www.vallinam.com.my/issue23/column7.html

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகோதையின் மடியில் 1