2009 ல் ஆஸ்திரேலியா சென்றபோது நண்பர் முருகபூபதியின் வீட்டில் தங்கியிருந்தேன். அவரும் அவர் துணைவியும் மிக அணுக்கமானவர்களாக இருந்தனர். முருகபூபதியை அதன்பின் நேரில் பார்க்கவில்லை. ஆனால் எழுத்துவழியாக அணுக்கமானவராக இருக்கிறார்.
இலங்கையில் இதழாளராக இருந்த முருகபூபதி புலம்பெயர்ந்தபின் வேறுவகை வேலைக்குச் சென்றாலும் உள்ளத்தளவின் ஓர் இதழாளர். வெவ்வேறு இணையதளங்களில் எழுதிவருகிறார். அவரை ஒரு செய்தியாளராகவே நண்பர்கள் அனைவரும் அறிவார்கள்.
ஈழப்பிரச்சினையில் மிக நிதானமான அணுகுமுறையும் தான் நினைத்ததை திடமாகச் சொல்லும் தன்னம்பிக்கையும் கொண்டவராக இருந்தார் முருகபூபதி. இன்று ஈழமக்களின் மறுவாழ்வுக்கென விரிவான பங்களிப்பை அளித்துவருகிறார்