ஜெமோ,
நவீன உலகின் புதிய கடவுள், “சாமி மேலிருந்து நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறது, தவறிழைத்தால் கண்ணைக் குத்தும்” என்ற குழ்ந்தை மனதில் விதைக்கபட்ட பயம் பலன் கொடுத்ததா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் இந்த “ஒற்றைக்கண் கடவுள்” பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற பயம் மனிதனிடம் நன்றாகவே வேலை செய்கிறது. மனிதனை மனிதனிடம் இருந்து காக்கிறது, மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது, குறிப்பாக “பாதுகாப்பான” சிங்கப்பூர். சிங்கப்பூரில் எங்கெங்கு காணினும் இந்த கடவுள்தான், தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். இந்த கடவுள் அற்ற சிங்கப்பூர் கண்டிப்பாக இப்போது இருக்கும் சிங்கப்பூராக இருக்காது. #கடவுள் நம்பிக்கை.
சரவணன் விவேகானந்தன்
https://www.youtube.com/watch?v=0iTZxqsXpfo
அன்புள்ள சரன்
நல்ல கரு. புத்திசாலித்தனமாக அழகாக எடுத்திருக்கிறார்கள். அந்த ‘திருடர்’ மிகச்சிறந்த நடிகர். ரஷீத் பாறக்கல் பிரதீப் புதுச்சேரி இருவருமே எதிர்கால இயக்குநர்கள். மல்லூஸ் கிளம்பிவந்தபடியேதான் இருக்கிறார்கள்
ஜெ