அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
முதலில் ஒரு சிறு அறிமுகம். நான் தங்களுக்கு கீதை கட்டுரையில் வந்த ஒரு கருத்தை பற்றி எழுதியிருக்கிறேன். ஞாபகமிருக்கலாம்.
ஐயா, நான் MBA(Finance) முடித்து Delhiயில் மாருதி கார் கம்பனியில் சில காலம் பணியாற்றி பிறகு சொந்தமாக நண்பர்களுடன் Bangalore-ல் Software கம்பனி ஒன்றும் திருச்சியில் Engineering Fabrication நிறுவனமும் நடத்தி வந்தேன். ஒரு வருடம் முன்பு இவை எல்லாத்திலிருந்தும் விலகி தற்போது Power Energy வழியில் புதிய Project ஒன்றுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்.
என் பட்டபடிப்பு எல்லாம் Sri Sathya Sai University (Puttaparthi Sai Baba) அவர்களின் கல்லூரியில் தான். தற்போதும் அவர்கள் நிறுவனத்தில் மாநில இளைஞர் அணி தலைவராகவும் இருக்கிறேன். இதன் பணியில் பல கூட்டங்களில் பேசுவதும் பயிற்சி பட்டறைகள் நடத்துவதும் மாநில அளவில் பல சேவை பணிகளை ஒருங்கினைப்பதும் அடங்கும்.
தங்களை அறிமுகப்படுத்தியது internetதான். முதலில் படித்தது ‘விஷ்ணு புரம்’ தான். பிறகு தங்கள் வலையில் வரும் கட்டுரைகள். தொடர்ந்து ‘ஆறு தரிசனங்கள்’, ‘இந்திய ஞானம்’, ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ ஆகியவை. தற்போது ‘நலம்’ மற்றும் ‘அனல் காற்று’ போய்கொண்டிருக்கிறது. ‘பண்படுதல்’ மற்றும் ‘சிலுவையின் பெயரால்’ இன்னும் திறக்கவில்லை.
என்னுடைய வாசிப்பு சிறு வயதில் ‘கோகுலம்’ இதழில் ஆரம்பித்து பின்பு இளம் வயதில் பாலகுமாரன் வழியாக கல்கி, பின்பு ஜெயகாந்தன் மற்றும் திஜா இவர்களுடன் தான் உள்ளது. ஆங்கில வழி படிப்புமுண்டு அதிகமாகவே.
இவையெல்லாம் நாம் பின் பகிர உள்ள கருத்துக்களுக்கும் கடிதங்களுக்கும் முன்னுரையாக இருக்கட்டுமே என்றுதான். இரண்டு வாரங்களாக வெளி மாநில பணியாக இருந்ததால் தங்களுடன் சில கட்டுரை பற்றியும் கருத்துக்கள் பற்றியும் எழுதமுடியவில்லை. மீண்டும் நவம்பரும் அப்படியே.
பல தளங்களில் தமிழ்நாட்டில் படித்த வரையில் பெரியாரை சார்ந்து இந்திய தொன்மையான கலாசாரத்தை குறைகூறியே உள்ளது. நிதானமான பார்வையில் ஜெயகாந்தன் ஒரு முன்னோடி. இன் தாயின் உடலில் சில கருப்பு தழும்புகள் உள்ளதென்றால் அதற்காக அவளை புறக்கணிக்க முடியுமா என்ன? தமிழ்நாட்டில் எல்லா பேச்சுக்களிலும் நாம் பெரியாரை புகழவேண்டும் இல்லையேல் நாம் இந்துத்துவ ஆதரவாளனாகி விடுவோம். பல கம்யூனிச நண்பர்களிடம் கேட்பேன், ‘எனக்கு சோசியலிசமும் வேண்டும் என் நாட்டின் தொன்மையின் பெருமையும் வேண்டும், அப்போது எனக்கான சமுதாய அரசிலமைப்பு எது?’ இதற்கு தற்போது விடையில்லை.
அத்தருணங்களில் தான் தங்களின் கருத்துக்கள் என்னை ஈர்த்தன. உங்களையும் இந்துத்துவ பணியாளனாக பார்பவர்களையும் இணையத்தில் காணமுடிகிறது. என்னால் புரிந்துக்கொள்ளமுடிகிறது தங்கள் நிலையை.
நான் 15 முதல் 26 வயதுவரை பிறமாநிலங்களிலேயே வாழ்ந்ததினால் தமிழகத்தில் குடியேறிய பிறகு இந்த சாதி வழி பார்வை மிக கொடுமையாக பட்டது. என் கல்லூரி சூழலிலும் சாதி இன மொழி தேச வேறுபாடுகளில்லை. இந்த சமுதாய பார்வைக்கு பெரியாரின் வழி நோக்குதலே காரணமென நான் கண்டேன். இவ்வளவு சாதி கொடுமைகளுக்கு காரணம் பிராமணர்களே என பெரியாரின் சுருக்கமான உணர்ச்சிமிகுந்த புரிதலே என கண்டேன். நிதர்சன உண்மைகளோ வேறு விதமாக இருந்தது. பிராமணர்கள் அல்லாமல் வேறு பல சாதிகளும் பிற மக்களை தாழ்வாக நடத்தியே வருகிறார்கள். ஆனால் வெளியில் இவைகளை சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் நான் பிராமணன் இல்லை.
அப்போதுதான் தங்கள் சுதந்திரமான நடுநிலையான என் சிந்தனைக்கு ஒத்த கருத்துக்களை வாசிக்கநேர்ந்தது. மகிழ்தேன். மிகவும் மகிழ்தேன்.
நன்றியும் அன்பும் என்றும்
வே. விஜயகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ !
தங்கள் வலைமனையில் என்னால் log in ஆக முடியவில்லை எனவே உங்களுக்கே அனுப்புகிறேன் சிரமத்தைப் பொறுக்கவும்
திரு வி என்பவர் எழுதிய சோர்வு என்ற கடிதம் கண்டேன்.நானும் ஒரு மன நல மருத்துவன் தான் என்பதால் ஓரிரு கருத்துக்களைக் கூறகிறேன்.திரு வி மனச் சோர்வால் (depression) பாதிக்கப் பட்டிருப்பது தெரிகிறது. மனச் சோர்வு ஒருவரது உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களால் சோர்வு ,எதிலும் நாட்டமின்மை ,உற்சாகமின்மை எதிர்மறை எண்ணங்கள், குற்ற உணர்வு போன்றவை ஏற்படுகின்றன.இந்நிலையில் ஒருவருக்கு சிந்தனை, செயல் இரண்டிலும் ஒரு தேக்கநிலை ஏற்படுகிறது(.psycho motor inertia).
இந்த நிலையில் எதுவுமே செய்ய நாட்டமில்லாததால் செய்ய வேண்டிய செயல்கள் தேங்கி மலைப்பை எற்படுத்திகின்றன.அந்த மலைப்பு மீண்டும் inertia என்ற தேக்கநிலையை அதிகரிக்கிறது.
தாங்கள் மிக மிக அழகாகக் கூறியது போல் செயலாற்றத் தொடங்குவதுதான் மருந்து.ஆனால் செய்யத் துவங்கும் முன் மிகப் பெரிய இலக்குகளை வைத்துக் கொண்டால் (உ-ம் கரமசாவ் சகோதரர்களை மொழிபெயர்ப்பது) மனச் சோர்வு அதிகமடையும்.
எனவே மிக மிக எளிய இலக்குகளை வைத்துக் கொள்வது நல்லது.
மேலும் இன்பம் கொடுத்துவந்த எந்த விஷயத்திலும் (இசை,உணவு,வாசிப்பு) நாட்டமின்றிப் போய் விடும் (ANHEDONIA என்று பெயர்).இதை வெல்லவும் மேற்கண்ட முறையான செயல்பாடே உதவும்.பிடிக்கிறதோ இல்லையோ முன்பு ஒருவருக்கு மகிழ்ச்சி அளித்துவந்த செயல்களைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.கடமைக்காகச் செய்ய ஆரம்பித்துப் பின் உண்மையிலேயெ ஆர்வம் வரத் தொடங்கி விடும். எழுதுவதோ,படிப்பதோ,இசை கேட்பதோ அதற்கான மனநிலை வரும் வரை காத்திருக்காமல் செய்யத் தொடங்கினால் அந்த மனநிலை வரும் என்பது உளவியல் கருத்து.DONT WAIT FOR MOOD.START ACTING. MOOD WILL FOLLOW.
எனினும் அளவுக்கு அதிகமான பதற்றம்,மனப் பிறழ்வு(psychosis),தூக்கமின்மை போன்றவற்றிற்கு மருந்துகள் உதவும்.American psychological association (APA) மிதமான மனச் சோர்வுக்கு உளவியல் சிகிச்சையையும்,தீவிர பாதிப்பிற்கு மருந்துகளையும் பரிந்துரைக்கிறது.ஆனால் பல மருத்துவர்கள் உளச் சோர்வை வெறும் ரசாயன மாற்றமாகப் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது.
creativity and madness என்பது ஒரு hot டாபிக்.படைப்பூக்கம் என்பது உளவியல் நெருக்கடிகளிலேயே தொடங்குகிறது. பலரும் அதற்குப் பலியாகின்றானர். ஜெயமோகன் போல் ஓரு சிலரே அதைக் கலையாக உருமாற்றுகின்றனர்(sublimation).
திரு வி அவர்களே! மனச் சோர்வடைந்திருப்பதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை.இது நார்மலா அப் நார்மலா என்று யோசிக்காமல் தொந்தரவு கொடுக்கிறதா இல்லையா (troublesome or not)என்று பாருங்கள்
அன்புடன்
ராமனுஜம்