இசை,டி.எம்.கிருஷ்ணா-கடிதங்கள்

6134072

 

 

அன்புள்ள ஜெ,இவ்விவாதத்தின் முழு பரிமாணத்தையும் பொறுமையாகவும் விரிவாகவும் தொட்டுக்காட்டிள்ளார் நண்பர் கார்திக் அவருக்கு என் வாழ்த்துகள் பதிப்பித்ததற்காக உங்களுக்கு நன்றிகள்.

கர்நாடக இசைச்சூழலில் உள்ள  குறைப்பாடுகள் பலதையும் டி.எம். கிருஷ்ணா விவாதித்துள்ளார். வேறெந்த கர்நாடக இசைக்கலைஞரும் அநேகமாக இதுவரை அடையாளப்படுத்தாதவை இவை.  ஏறக்குறைய டி.எம்.கிருஷ்ணாவின் முன் வைக்கும் எல்ல விஷயங்களையும் கார்திக் விளக்கமாகவே எழுதிவிட்டார். விவாதம் நிதானமடைந்திருக்கும் நிலையில் அதன் முழுமை கருதி,  நண்பர் கார்திக்கின் கடிதத்திற்கு ஒரு கூடுதல் இணைப்பாக, அதில் விடுபட்ட சிலதை மட்டும் சுருக்கமாக சொல்லலாம் என நினைக்கிறேன். நீங்களோ  நண்பர்களோ இவற்றை மறுத்தோ விரித்தோ எழுத முடிந்தால் மேலும் அறிந்து கொள்வேன்.

1. மியூசிக் அகாடமி இசைவிழா நிரலில் தகுதியான இளம் கலைஞர்களுக்கு நியாமான ஒதுக்கீடு இல்லாததை கவனப்படுத்திய முதல் மூத்த இசைக்கலைஞர் கிருஷ்ணா மட்டுமே. என் நினைவு தவறில்லை என்றால் ஆள்காட் குப்பம் நிகழ்ச்சிக்கும் முன்னதாகவே ஊடகத்தில் தோன்றி  அவர் கவனத்தில் கொண்டு வந்தது மியூசிக் அகாடமியின் நிரலில் தகுதியான இளம் இசைக்கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்படாததைத்தான்.

நன்கு பாடத்தெரிந்த யார் வேண்டுமானாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஒரு எல்லைக்கு மேல் சென்று விட முடிந்தால் உயர வாய்ப்புகள் பெறமுடியும் என்றாகிவிட்டது. ஆனால் இப்போட்டிகளின் மேடைக்கு செல்ல விரும்பாமல் கர்நாடக இசையையும் இசைவிழா மேடைகளையும் மட்டுமே வாய்ப்பாக நம்பியுள்ள மரபான இளம் இசைக்கலைஞர்களின் சிரமங்கள்.  (இசையை தொழிலாக கொள்ளாத) சுமாராக பாடத்தெரிந்த வெளிநாட்டில் வசிப்பவர்கள் தொடர்பு  பணபலம் காரணமாக சென்னையின் முக்கியமான இசைக்கச்சேரியில் பிரைம் டைமில் இடம் பிடித்துவிடுவதும் திறமையும் தகுதியும் கொண்ட உள்ளூர்  இளம் இசைக்கலைஞர்கள் ஓரங்கட்டப்படுவதற்கும் எதிராக குரல் கொடுத்து அதை ஒரு பிரச்சினையாக அதன் வட்டத்திற்கு வெளியே அடையாளப்படுத்திய இசைக்கலைஞர் கிருஷ்ணாதான். (இதற்கு முன்னதாக என்றால் ஆனந்த விகடனில் இசை விழா பற்றி எழுதிய தொடரில்  நண்பர் லாஸ் ஏஞ்சலஸ் ராம்  இந்த விஷயத்தை ஒரு ஹாஸ்யமாக எழுதியிருப்பார். விகடன் பதிப்பில் 2006 ஆம் ஆண்டு வந்த டிசம்பர் தர்பார் என்ற புத்தகத்திலும் இது உள்ளது http://books.vikatan.com/index.php?bid=314).

2. பக்தியின் உச்சநிலையாக, ஒரு புனித மதச்சடங்காக உச்சநிலையில் இசையை வைப்பது  அதை மேலும் இறுக்கமடையச்செய்து இசையை ஒரு தூய ”கலையாக” அணுகவும் விஸ்தரிக்கவும் விவாதிக்கவும் தடையாகிறது என்பதை பற்றியும் கிருஷ்ணா உரையாடுகிறார்.
3. இசையை நிகழ்த்துவதில் இசைக்ககலைஞருக்கு உள்ள தனிப்பட்ட சுதந்திரம். ஒரு பாடகர் வழக்கமான கச்சேரி வடிவத்தின் படி சம்பிரதாயமான உருப்படிகளை / அவருக்கு விதிக்கப்பட பல மணிநேரத்தையும் நிரப்பும்படி பாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் நிலை. இது பாடுவதை ஒரு வலிந்த இயந்திரத்தனமான கட்டாயமான சடங்காக்கி, இசையை ஒரு தூய கலையாக, மனதொன்றி ஆத்மார்த்தமாக  நிகழ்த்துவதற்கு தடையாகிறது என்பதை, ஒரு பாடகராக தன் சுய அனுபவத்தில் உணர்ந்ததை விவாதிக்கிறார். ஒரு வகையில் இது ரசிகர்கள் இசைக்கலைஞர் மீது செலுத்தும் (ஏறத்தாள நிலபிரபுத்துவ மனநிலைக்கு) எதிரானது; கலையின் நோக்கில், கலைஞனின் மனோதர்மத்திற்கு, கலைஞன் தேர்ந்தெடுக்க விரும்பும் வெளிப்பாட்டின் தனித்தன்மைக்கும் முக்கியமானது.
ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் கர்நாடக இசையின் ஆழத்தை, அடிப்படைகளை, நுட்பங்களை, வரலாற்றை ஒரு ஆய்வாளருக்குரிய ஒழுங்குடன் புறவயமாக வைத்து  விளக்கவும் விரிவாக விவாதிக்கவும் கிருஷ்ணாவால் முடிகிறது என்பது மிகவும் முக்கியமானது.முக்கியமான போதாமை என்பது  செவ்வியல் கலைகளின் மீதான கோட்பாட்டுகளில் அவருக்குள்ள மேலோட்டமான புரிதல்.  சில மாதங்களுக்கு முன் கீதா ஹரிஹரனுடன் உரையாடும்போது நாட்டுப்புற கூத்தின் அடவுகளை செவ்வியல் இசையின் ராக நுட்பங்களையும் ஏறக்குறைய சமமான தளத்தில் வைத்து விவாதிக்கிறார். அதேசமயம் செவ்வியல் கலையை ரசிப்பதற்கு தேவைப்படும் அடிப்படையான பயிற்சியை, கலையின் அடிப்படைகளில் அறிமுகமில்லாத நிலையில் அதை ரசிப்பதில் ஏற்படும் தடையை அவர் அநேகமாக அடையாளம் காண்பதில்லை.

தமிழ்ப்பண்களின் பெயர்களை ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரத்தை குறிப்பிடுகிறார் இருந்தும் தமிழில் இதுவரை நிகழ்ந்துள்ள இசைவரலாறு,  அழகியல் விமர்சனங்கள்,  செவ்வியல் கோட்பாட்டு விவாதங்கள் ஆகியவற்றில் பெரிய அளவுக்கு வாசிப்பு இல்லை என்பதும்,  தமிழில் எழுதுவதில்லை என்பதும் துரதிருஷ்டமே.

நன்றி,
வேணு தயாநிதி

 

 

 

 

வணக்கம்.

இந்தப் பதிவையும் உங்களின் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். இதைத் தான் முதலில் எழுத நினைத்தேன். கோர்வையாக வராத காரணத்தால், விட்டுவிட்டு, நேற்றைய பதிவை எழுதினேன். எந்தவித அங்கீகாரத்துக்காகவும் இதைச் செய்யவில்லை. ஆற்றாமையால் எழுதுகிறேன். நாளிதழ்கள் கண்டிப்பாக என் எழுத்தை வெளியிடாது. இது நாளிதழ் கலாச்சாரத்துக்கு வெளியே இயங்குவது. தனியாக டீ ஆற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு ஆல்ட்டர்னிட்டிவ் தாட் தேவைப்படுகிறது. அதனால் உங்களுக்கு அனுப்புகிறேன்.

கபாலிக்கு தலித்தியத்தில் தொடங்கி பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.ஆசியாவின் முக்கியமான விருது ஒரு போலியான, அரைகுறை முயற்சிக்கு வழங்கப்பட்டதற்கு பெரிதாக எந்த ஒரு சலனமும் ஏற்படவில்லை, உங்களின் பதிவைத் தவிர. கலை பற்றிய பிரஞை இருப்பவர்களும் எது சரியென்றுத் தெரியாமல் கடந்துவிட்டார்கள்.

என்னால் இதை விட எளிமையாக இவர்களுக்குப் புரியவைக்க முடியாது. உங்கள் பதிவில் கூறிய படி, சுரணையுள்ளவர்கள் குறைவு என்றே  தோன்றுகிறது.

என்னுடைய பதிவு கீழே

==============================================================

New wave, new rave

Hidin’ from reality
In your world of hypocrisy – Bob Marley

நேற்று எழுதிய பதிவின் Prequel

ப்ளூஸ் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் ஆஃப்ரோ அமெரிக்கர்களிடமிருந்து தோன்றியது. பின்னர், அது, ஜாஸ், ராக் அண்ட் ரோல், ராக், இன்னும் ஏகப்பட்ட இசை வடிவத்துக்கு வித்திட்டது.

அது உலகப் பிரபலமாகி, வெள்ளை மாளிகை வரை போனது எப்படி? ஒரு இனத்தின் எழுச்சியோடு, விடுதலையோடு பயணிக்க வேண்டிய அவசியம் அதற்கு இருந்தது.

இதை ஏன் சொல்கிறேனென்றால், என்னைப்பொருத்தவரை ப்ளூஸ் தான் இன்று உலகத்தில் இருக்கும் இசையிலேயே எளிமையான இசை. பாடு பொருள் எளிமையானது,மூன்றே மூன்று chords போதும். அவர்களின் வலியைப் பதிவு செய்ய அதுவே போதுமானதாக இருந்தது. அலங்காரங்கள் எல்லாம் பிற்பாடு ஏற்பட்டவை. அது எளிமையாக இருந்ததினால் தான் அவர்களையும் தாண்டி, உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. ப்ளூஸின் எளிமை தான் எல்லோரையும் ஈர்க்கச் செய்கிறது.

திரும்பத் திரும்ப ஏன் எளிமை என்கிற சொல்லை உபயோகப்படுத்துகிறேன் என்றால், நான் சிறு வயது முதல் கர்னாடக சங்கீதம் கேட்டுக் கொண்டு வந்தவன். ப்ளூஸ் ஈர்த்த அளவுக்கு கர்னாடிக் ஈர்க்கவில்லை.

சிலரின் கருத்துக்கள் :

i : கர்னாடிக் ஒரு குறிப்பிட்ட வகையினரிடம்/வகைப்பாட்டுக்குள் சிக்கி இருக்கிறதனால் எங்களால் அதற்குள் ஈடுபடமுடியவில்லை.

ஏற்புடைய கருத்து. முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.

ii ) என்ன காரணத்தினாலோ அதற்குள் ஈடுபட முடியவில்லை.

இந்தியன் படத்தில் தன்னா நானே தானானே கேட்டதும் கமலுக்கு ஏற்படும் ரியாக்ஷன் தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.

ஸோ, இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விட்டு, குப்பத்திலோ, கவர்னர் மாளிகையிலோ எங்கு வாசித்தாலும் இப்போதைக்கு பயன் பெரிதாக இருக்காது. மேட்டுக்குடி மக்கள், அடித்தட்டு மக்கள், இவர்கள் இரண்டையும் விட்டுவிடுவோம், நடுவாந்தரமாக இங்கு இதைப் படித்துக் கொண்டிருக்கும் நம்மில் எப்போது ரசனை பரவலாக உருவாகும். இதைப் பற்றி முதலில் பேசலாம். அப்புறம் சேரிக்குப் போகலாம். நாம் தான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உடனுக்குடன் ஆதரிக்கிறோம். ஒரு செயலை ஆதரிப்பதற்கு முன்னால் நமக்கு முதலில் புரிதல் வேண்டாமா? முதலில் நம்மில் தான் இந்த மாற்றம் உருவாக வேண்டும், கிருஷ்ணா முதலில் நம்மிடம் தான் நிறைய உரையாடிருக்க வேண்டும், குப்பத்துக்குப் போய் சொல்லிக்கொடுப்பதற்கு கர்னாடக சங்கீதம், ப்ளூஸ் போன்று ஒரு இனவெழுச்சியின் ஒரு அங்கமோ, விடுதலை முழக்கமோ கிடையாது. ஒரு சமயம் ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன் போன்றவர்கள் அந்தோணி தாசன் போன்றவர்களுடன் ஜாலிக்காக சேர்ந்து செய்ததே உத்தமம் என்று தோன்றுகிறது. நான் கூட என்னுடைய கிட்டாரை எடுத்துக் கொண்டு ஒரு குப்பத்துக்குப் போக முடியும், ஃபோட்டோக்கள் எதுத்துக்கலாம். இங்கு ஷேர் செய்து கொள்ளலாம். சமூக ஆர்வலர் என்கிற பேரை சில மாதங்களில் நிறுவிக் கொள்ளலாம்.இன்னும் சொல்லப் போனால், என்னுடைய ப்ளூஸ் எல்லோருக்கும் புரியும் படி இருக்கும், ராக் அன்ட் ரோல் பீட்டுக்கு ஏத்தபடி அவர்களை ஆட வைக்க என்னால் முடியும். இப்படி எல்லோரும் சேர்ந்து அவர்களை exploit செய்வது சரியா? சோத்துக்கு வழி இல்ல, போங்கடா நீங்களும் உங்க ப்ளூசும்னு சொல்லிட்டா?

இதைப் படியுங்கள்.

http://dyske.com/paper/778

(இந்த ஆர்டிகிளில் எனக்கு முழுவதும் ஒப்புதல் இல்லை. எனக்குத் தெரிந்து சில நிறைய அமெரிக்கர்கள் ஜாஸை தூக்கிப் பிடிப்பார்கள்)

To be able to enjoy instrumental music, you must be able to appreciate abstract art, and that requires a certain amount of effort. Just mindlessly drinking wine, for instance, would not make you a wine connoisseur. Mindlessly looking at colors (which we all do every day) would not make you a color expert either. Great art demands much more from the audience than the popular art does.

இது தான் முக்கியமான விஷயம். இதை கர்னாடிக் இசைக்கு பொருத்திப் பார்க்கலாம். ஸோ, ஒரு வகையான உழைப்பு தேவைப்படுகிறது, சில கலை வடிவங்களை ரசிப்பதற்கு. நீங்களே மற்ற விஷயங்களைத் தேடிக்கொள்ளுங்கள்.

Ry Cooder, நான் அடிக்கடி எழுதும் ஒரு இசைக்கலைஞர். என்ன செய்தார் இவர்?

Cooder turned his attention to world music, recording the album A Meeting by the River with Indian musician V.M. Bhatt. Cooder’s next project, a duet album with renowned African guitarist Ali Farka Touré titled Talking Timbuktu, won the 1994 Grammy for Best World Music Recording. His next world crossover would become one of the most popular musical rediscoveries of the 20th century. In 1997, Cooder traveled to Cuba to produce and play with a group of son musicians who had little exposure outside of their homeland. The resulting album, Buena Vista Social Club, was a platinum-selling international success that made stars of Compay Segundo, Ibrahim Ferrer, and Rubén González, and earned Cooder another Grammy. He continued to work on projects with his Buena Vista bandmates, including a collaboration with Manuel Galbán in 2003 titled Mambo Sinuendo. His other work in the 2000s included sessions with James Taylor, Aaron Neville, Warren Zevon, and Spanish diva Luz Casal.

கிருஷ்ணா இவர் மாதிரி சில விஷயங்களை இங்குள்ள சூழ்நிலையில் அவரின் தளத்தில் “”தொடர்ந்து”” இயங்கி வந்திருந்தால் கண்டிப்பாக சிலாகித்திருப்பேன். ஒரு வெள்ளையருக்கு ஆஃப்பிரிக்கா, மாலியில் இருக்கும் ஒருவரையும், நம்முடைய விஸ்வ மோகன் பட்டையும், க்யூபாவிலிருக்கும் கலைஞர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு எது உந்து சக்தி.

பதில். Music is Universal.

அமெரிக்க லைட்னிங் ஹாப்கின்ஸ், ஜான் லீ ஹூக்கர், மாலியில் இருக்கும் அலி ஃபார்க்கா எல்லோரும் ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்களை இணைத்ததே இவரின் வெற்றி.

யார் பின்னால் ஓடுகிறோம் என்று தெரிந்து ஓடுங்கள்.

இப்போது நான் நேற்று எழுதிய பதிவையும் படியுங்கள், ஓரளவுக்கு தெளிவு வரலாம்.

சுபம்.

https://watchingthewheelsweb.wordpress.com/2016/07/31/nothing-can-bind-us-together-quite-like-music-part-3/

Srinivasan R

 

 

முந்தைய கட்டுரைஅஞ்சலி-மகாஸ்வேதா தேவி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14