அஞ்சலி : வே.சபாநாயகம்

1

 

வே.சபாநாயகம் தமிழ்ச்சிற்றிதழ்களைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்தவர். சிற்றிதழ்சேகரிப்பாளர். வெளிவந்த சின்னாட்களிலேயே மறக்கப்பட்டுவிடும் சிற்றிதழ்களை தொகுத்து அவற்றின் உள்ளடக்கம் குறித்து எழுதி ஒரு தொடர்ச்சியை உருவாக்க அவரால் முடிந்தது. அர்த்தபூர்வமான  தொடர்ச்சியையே நாம் வரலாறு என்கிறோம். அவ்வகையில் அவர் வரலாற்றை தொகுத்தவர்.

வே.சபாநாயகம் மறைந்த செய்தி சற்றுமுன் வந்தது.

நவீன தமிழ் இலக்கியத்தின் ஆர்வலரும் பேராசிரியரும் எழுத்தாளரும் நல்ல பண்பாளருமாகிய திரு வே சபாநாயகம் (81 வயது) அவர்கள் இன்று (4.7.2016) காலை 5.30அளவில் நெஞ்சடைப்பு காரணமாக விருத்தாசலம் பெரியார் நகரில் (வடக்கு) அவரது வீட்டில் காலமானார். நாளை மறுநாள் (6.7.2016) காலை 8 மணிக்கு மணிமுத்தாறு கரையில் இறுதி சடங்குகள் நிகழ்த்தப் பெறுகின்றன. தொடர்புக்கு 04143238588, 9786916678. தளம் இதழின் நண்பர்களுள் தொடக்கம் முதல் உற்ற துணையாக நின்ற சபா அவர்கள் தளத்தின் வழிகாட்டியுமாவார்.

அவரது குடும்பத்தினர்களுடனும் உற்ற இலக்கிய நண்பர்களுடனும் தளம், தனது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறது. — தளம் நண்பர்கள்

சபாநாயகம் அவர்களுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைவெய்யோனொளியில்…
அடுத்த கட்டுரைகிறித்துவமும் அறிவியலும்