பொதுவாக, இளைஞர்களும் குடியேற்றப் பின்னணி கொண்டவர்களும் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். முதியவர்கள், பெண்கள் பெரும்பாலும் வெளியேற வேண்டும் என்றே வாக்களித்தனர். என் இந்திய நண்பர் சிறில் அலெக்ஸ் பிரிட்டன் வெளியேற வேண்டும் என வாக்களித்தார். என்ன காரணம் என்று கேட்டேன். “இன்று தொழில்நுட்பம், மனிதவளம் இரண்டையும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே பிரிட்டன் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயப்படுத்துகிறது. பிரிந்து சென்றால், இந்தியாவிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு அது நல்லது” என்றார்.
இது உலகம் முழுக்க வலதுசாரி அரசியல் மேலெழுந்துவருவதன் அடையாளம். உலகம் ஒன்றாக ஆவதைப் பற்றிய கனவுகள் இல்லாமலாகிவிட்டன.
http://m.tamil.thehindu.com/opinion/columns/சரியும்-மானுடக்-கனவு/article8800284.ece