நண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற சில செயல்பாடுகள் அதற்கான குறியீடாக உலகமெங்கும் பேசப்படுகின்றன.
சிறில் அந்த தரப்பை கிறித்துவத்தின் கோணத்தில் நின்று மறுக்கிறார். கிறித்துவச் சபை அறிவியலுடன் ஒரு மோதலையும் உரையாடலையும் மேற்கொண்டது என்கிறார். கிரேக்க தத்துவம், பண்டைய அறிவியல் ஆகியவற்றின் அடிப்படைகளை தன் கோணத்தில் அது ஏற்றுக்கொண்டது என்றும் , அதை பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தது என்றும், இன்றைய அறிவியலில் கிறித்தவத்தின் பெரும் பங்களிப்பு உண்டு என்றும் வாதிடுகிறார்.
ஒரு விவாதத்துக்கு தொடக்கமாக அமையவேண்டிய கட்டுரை.