அன்புள்ள ஜெயமோகன் அண்ணா அவர்களுக்கு வணக்கம்,
இக்கடிதம் அ.கா.பெருமாள் ஐயாவை சந்தித்தது குறித்து தங்கள் பார்வைக்காக.
பண்டைய கழிவறை குறித்தான புரிதலுக்கு தாங்கள் ஆலோசனை கூறியபடி அ.கா.பெருமாள் ஐயாவை இங்கு சென்னையில் நேற்று முன்தினம்(28.06.16) சந்தித்தோம். திரு.முத்துராமன் அவர்களின் உதவியால் பெருமாள் ஐயாவின் சந்திப்பு சாத்தியமாயிற்று. (லேப்டாப் பழுதாகிவிட்டதால் தங்களுக்கு உடன் கடிதம் எழுத முடியவில்லை.)
பண்டைய காலங்களில் மக்கள் எவ்விதமான கழிவறை முறையை பின்பற்றினார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் கல்வெட்டுக்களிலோ, செப்பேடுகளிலோ, ஓலைச் சுவடிகளிலோ இல்லையென்று ஐயாவிடம் இருந்து தெரிந்துகொண்டோம். பண்டைய கழிவறை முறை குறித்தான இன்றைய புரிதல்கள் எல்லாம் ஊகம் அடிப்படையில் எழுந்தவை என்றும் அது குறித்தான துல்லியமான ஆய்வுகள் ஏதும் இல்லையெனவும் அவர் கூறினார். மேலும் குமரி மாவட்டத்தின் சுகாதர நிலை மற்றும் அவர் அனுபவத்தில் கண்ட சுகாதர முறை குறைத்தான பரவலான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
மேலும் பல பயனுள்ள வரலாற்றுப் புரிதல்களை அவருடனான உரையாடல் மூலமாகப் பெற்றோம். கழிவறை குறித்து மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு அவரது வாழ்த்துக்களை பெற்றோம். வரலாற்றுப் புரிதல்களைப் பெற வேண்டியபொழுது ஐயா அவர்களை தொடர்புகொள்ளவும் சந்திப்புகள் மேற்கொள்ளவும் ஐயா அவர்கள் இசைவு தெரிவித்துள்ளார்.
தங்களின் தொடர் வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் பணிவன்புடன் வணக்கங்களும் நன்றியும்.
காந்தி சேவையில் பணிவன்புடன் சகோதரர்கள்,
செல்லதுரை 9790842245
முருகேசன் 9790906735
காந்தி சர்வ சமய பிரார்த்தனை மையம்