யுவகிருஷ்ணா தெலுங்கு சினிமா, உள்ளூர் கில்மா, தொண்டர் அரசியல் என பலவகையான நிறங்களின் கலைடாஸ்கோப் கலவை. ஆனாலும் அவரை வாசிக்கச்செய்வது அவரது நகைச்சுவை. பழைய குமுதம் இதழ்களில் இந்த வகையான சுட்டித்தனம் கொண்ட பொறுப்பற்ற நகைச்சுவை ரசிக்கும்படியாக இருந்தது. யுவகிருஷ்ணா அதன் தொடர்ச்சி.
இக்கட்டுரை அவரது சமீபத்திய நல்ல எழுத்து என நினைக்கிறேன். சிட்டி, சா.கந்தசாமி முதல் அழகியசிங்கர், பௌத்த அய்யனார், சிபிச்செல்வன் என இவ்வகை எழுத்துக்கு ஒரு பெரிய மரபே உண்டு. பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக சாப்பிடுதல் என்னும் அழகியல் கொண்டவை அவை.
ஆனால் ஒரிஜினல்களைவிட நன்றாக இருக்கிறது பகடி. இனி அவர்கள் என்னதான் செய்வார்கள்?
விஜயமகேந்திரன் படைப்புகள்