ஆடம்பரமும் நகலும்

 

1

 

அன்புள்ள ஜெமோ

நீங்கள் இத்தனை பிராண்ட் கான்ஷியஸ் ஆக இருப்பீர்கள் என நினைக்கவில்லை இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க ஒரு மனநிலை வேண்டும். லக்சுரிகளில் உங்களுக்கு ஆர்வமே இருக்காது என்பதே என் எண்ணமாக இருந்தது

எஸ் ஆர் சரவணன்

***

அன்புள்ள சரவணன்

நான் எழுதியது பிராண்ட்களைப் பற்றியோ ஆடம்பரங்களைப் பற்றியோ அல்ல. உண்மையில் சிக்கனம் பற்றி. உச்சகட்ட விலையுள்ள பிராண்ட்கள் பெரும்பாலும் வெற்றுச்செலவு. இருபதாயிரம் ரூபாய் சட்டைகள், முப்பதாயிரம் ரூபாய் செருப்புகள் அப்படிப்பட்டவை. நான் சந்திக்கும் தொழில்முறை நண்பர்கள் அவற்றைத்தான் அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவை அடையாளம். நான் அவ்வடையாளங்களால் அறியப்பட விரும்புவதில்லை

ஆனால் அடிப்படையான பிராண்ட்கள் தரம் என்றே அறியப்படுகின்றன. ஒரு ஜாக்கி ஜட்டி பிற ஜட்டிகளைவிட 30 சதம் விலை அதிகம். மும்மடங்கு உழைக்கும். ஆகவே அடிப்படையான பிராண்டுகளையே என்னைப்போல சிக்கனம் நாடும் ஒருவர் வாங்கி பயன்படுத்துவார். டியோரோசெல் வாங்கி போட்டால் என் ஒலிப்பதிவுக்கருவி ஒரு மாதம் உழைக்கும். ஐந்தில் ஒரு பங்கு விலையுள்ள போலி இரண்டு நாட்களுக்குக் கூட வராது

இந்தப் போலிப்பொருட்கள் மிகப்பெரிய மோசடிகள். அவற்றுக்கு நாம் அளிக்கும் விலை வீண். அந்தச் சுரண்டலைத்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆடம்பரத்தைப்பற்றி அல்ல

ஜெ

 

முந்தைய கட்டுரைவாசிப்பு அன்றும் இன்றும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82