லீலா – ஒரு கடிதம்

true

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம் – லீலா திரைப்படம் கண்டேன் உடனே படம் குறித்து தங்களுக்கு  எழுத வேண்டும் என்று தோன்றியது

அற்புதமான மனதை உலுக்கும் படம் – பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கேரளா தவிர ஏனைய இடங்களில் குறைந்த திரை அரங்குகளிலேயே வெளியிடப் பட்டிருக்கிறது

தமிழகக் கோவில்கள் பற்றி நீங்கள் எழுதியது நினைவுக்கு வருகிறது – ” தற்கால அற்பர்களுக்கு நம் முன்னோர்கள் விட்டு சென்ற விலை மதிக்க முடியாத சொத்து” என்று – வைதீஸ்வரன் கோவில், முத்துக்குமார சுவாமி,  எங்கள் குல தெய்வம் என பெருமையாக சொல்லும் எனக்கு கோவிலின் தற்கால நிலையை கண்டும், எட்ட நின்று ஒரு கையாலாகத்தனத்துடன்  புலம்பத் தான் முடிகிறது.

நாம் அறிந்தும் அறியாமலும் இருக்கும் ஒரு அற்ப நிலையை சுட்டிக் காட்ட “லீலா” போன்ற திரைப்படங்கள் உதவலாம்

நீங்கள் இந்த திரைப்படம் குறித்து நேரமிருப்பின் எழுதவும்மீண்டும் சினிமா குறித்தே மின்னஞ்சல் அனுப்புவது குறித்து மன்னிக்கவும்

ஆம்னிபஸ் தளத்தில் படித்த சில நாவல்கள் குறித்து  சில கட்டுரைகளை எழுதி உள்ளேன்

http://omnibus.sasariri.com/2016/02/blog-post_17.html

நன்றி

மணிகண்டன்

 

அன்புள்ள மணிகண்டன்

நான் தொடர்ந்து வெண்முரசின் உளநிலையில் இருப்பதனால் உடனடியாக சினிமா போன்ற இன்னொரு புனைவுலகுக்குள் நுழைய முடிவதில்லை

பார்க்க முயல்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34
அடுத்த கட்டுரைமனப் பிழைகள் பத்து