அன்புள்ள ஜெயமோகன்
ஒற்றைவரிகளின் வெற்றி கட்டுரை வாசித்தேன். முக்கியமான கருத்துக்கள்.ஆனால் அப்போதெல்லாம் அபப்டி கருத்தைச்சொல்லும் ஒற்றைவரிகளாவது இருந்தன. இன்றைக்குப்பார்த்தால் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா மாதிரியான அர்த்தமில்லாத ஒற்றைவரிகளைத்தானே உருவாக்குகிறார்கள்?
சண்முகம் தேவதாஸ்
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் கட்டுரை வாசித்தேன். இன்றைக்கு சாதாரணமான சர்ச்சைகளில் கூட ஒற்றைவரிகளை ஒருவகையான தாளத்துடன் சொன்னால்தான் வெற்றி என்று ஆகிவிட்டிருக்கிறது
தமிழனுக்கு தாளம் மீது இருக்கும் பற்றுக்கு அளவே இல்லை
நாராயணன் எஸ்
*
உங்களின் நீர்ப்பாசி கட்டுரை மிக அருமையாக இருந்தது… பரப்பியம் பற்றிய தெளிவு தமிழகத்திற்கு ஏற்படும் நாள் எப்போது விடியும்…? என்று காத்திருப்போம்….
ராபர்ட் ப்ரோமியர்
Dear Sir
I just read your கட்டுரையை தினமலரில்
படித்தேன் . நன்றாக இருந்தது . ஆனால் தமிழருக்கு இந்த சுயமரியாதை பற்றிய ஆர்வம் எப்போது குறைந்தது தெரியவில்லை .
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற இந்த வார்த்தை பொய் ஆக கூடாது.
அப்படி இல்லை, கடவுள் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் .
Wish you good day.
VRG Sankar
*
இன்றைய தினமலர் நீர்ப்பாசி கட்டுரை வாசித்தேன்.கண்டுபிடிக்க முடியாத மிருகம் உவமை சாலப் பொருந்தும்.
தமிழகத்தில் உள்ள இந்த Populist movements எல்லாம் நீங்கள் கூறும் அன்றைய சூழலில் எடுபடும் பிரச்சனைகளை பேசி ஆட்சியமைக்க செய்யும் தந்திரம் செய்பவர்கள்.
இலங்கை தமிழர், இந்தி திணிப்பு, விலைவாசி, மின்சாரம், மதுவிலக்கு ,ஜாதி ஒழிப்பு , போலி பகுத்தறிவு பல வகையான அன்றைய தேவைக்கேற்ப பரப்புரை நிகழ்த்தி மக்களுடைய அபிமானத்தை பெற முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். 60 களில் தொடங்கிய இந்த நிலை இன்று வரை நீடிக்கிறது. அதன் பரிணாம வளர்ச்சி ( latest version) தான் திரு மங்கலம் formula.
தமிழனின் இன்றைய தலையாய தேவை பணமே என்றுணர்ந்தால் அதுவே மிக பெரிய ஆயுதமானது தீயவர்கள் கையில்.
இந்த கொள்கை , இலட்சியம் எல்லாம் சும்மா பம்மாத்து. இடையிடையே மானே தேனே போட்டுக் கொள்வது போல.
தாள்களில் அச்சிட்டு காகிதக் கப்பலும், பட்டமும் விடத்தான் லாயக்கு இவர்களின் தேர்தல் அறிக்கைகள்.
ஆமென்.
நடராஜன்