தினமலர் 26, நீர்ப்பாசி

images

 

அன்புள்ள கட்டுரையாசிரியர் அவர்களிக்கு

இன்றைக்கு வெளியாகியிருக்கும் கட்டுரையான நீர்ப்பாசி முக்கியமான கட்டுரை. சுருக்கமானது என்றாலும் ஒரு முக்கியமான ஐடியாவை வெளிப்படுத்தியிருக்கிறது பரப்பியம் அல்லது பாப்புலிசம் பற்றி நான் எம்எல் இயக்கத்திலே இருந்தகாலகட்டத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் தலைவர் மட்டும் பேசுவார். அதை சுருக்கமாக அனைவருக்கும் புரியும் வகையிலே எழுதியிருக்கிறீர்கல். ஒன்றுக்கு இரண்டுமுறை வாசிக்கவேண்டியதுள்ளது. ஆனால் சாமானியர்களுக்குக்கூட வேறுபாடு புரிகிறது

இந்தமாதிரி கட்டுரைகலின் பிரயோசனம் என்னவென்றால் இதை மக்களில் ஒரு சாரார் உடனே பிடித்துக்கொள்வார்கள் என்பதுதான். சாதாரணமான அரசியல்பேச்சுக்களில் இந்தச்சொல் புழங்க ஆரம்பிக்கும். அது மிகவும் நல்லது. அரசியல்கருத்துக்கள் அப்படித்தான் போய்ச்சேரமுடியும்

 

செந்தில் மயில்சாமி

 

1

அன்புள்ள ஜெயமோகன்

பரப்பியம் [பாப்புலிசம்] பற்றிய கட்டுரையை வாசித்து வியந்துபோனேன். சுருக்கமான கட்டுரை. ஆனால் நாம் சிந்திக்கும் விதத்தையே மாற்றியமைக்கும் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்கிறது. பாப்புலிசம் வேறு கொள்கை வேறு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதை ஒரு தியரியாக அறிவது மிக உதவியானது. அதை எப்போதும் முன்வைத்துப்பேசமுடியும்

சரவணன்

 

அன்புள்ள ஜெயமோகன்

இந்தக்கட்டுரைகள் தேர்தல்காலத்திலே வருவதனால் தேர்தலுடன் இணைந்து பேசுகின்றன. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படைகளை அறிமுகம் செய்யும் எளிமையான கட்டுரைகள். நான் உங்கள் கட்டுரைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். இத்தனை எளிமையாக உங்களால் எழுதமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. நன்றி

சிவா

அன்புள்ள நண்பர்க்கு,

வணக்கம்.நலந்தானே.

தினமலரில் வந்த ஜனநாயக சோதனை சாலையில் -தேர்தல் சிறப்பு கட்டுரைகள் மிக முக்கியமானவை. பரபரப்பான தேர்தல் நேரத்தில் இக்கட்டுரைகள் சிறுநூலாக வெளியிடப்பட்டு மேலும் பலரை சென்றடையவேண்டியது அவசியம்.
நன்றி

தங்கமணி

 

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

26 நீர்ப்பாசி

25 குடிமகனின் சுயமரியாதை

24 நாம் அவர் என்னும் அரசியல்

23பொம்மைகளின் அரசியல்

22 பாத்திரத்தின் களிம்பு

21 எதிரும் புதிரும்

20 இரண்டுக்கும் நடுவே

19 தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை

18 நடிகர் நாடாளும்போது

17 வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்

16 நாளைய ஊடகம்

15 திண்ணைபேரத்தின் தேவை

14 யானைநடை

13-அரசியலின் இளிப்பு

12-வாக்காளராக வயதுக்கு வருதல்

11-உறிஞ்சும் பூச்சிப்படை

10-நமது செவியின்மை

9-ஊழலின் அடித்தளம்

8-யாருடைய கூலி பெறுகிறார்கள்?

7-வயிற்றைப்பற்றிப்பேசுங்கள்

6-ஏன் கத்துகிறார்கள்?

5-பேச்சுரிமை எதுவரை?

4-ஜனநாயகம் எதற்காக?

3-குற்றவாளிகள் யார்?

2-தனிமனிதனின் அடையாளக்கொடி

1-ஜனநாயக ஒழுக்கம்

 

முந்தைய கட்டுரைமெல்லுணர்ச்சி, மிகைநாடகம்,உணர்வெழுச்சி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 22