எனக்கு பூர்வீகம் மங்களூர் அருகில் ஒன்றரை பஸ் செல்லும் கிராமம்.காசர்கோடில் உறவினர்கள் உள்ளனர்.என் பெரியப்பா நரசிம்ம பட் ஒரு கன்னட மற்றும் மலையாள எழுத்தாளர்.
ஆகவே கதைக்களம் மிகவும் பழக்கப்பட்டதாக உணர்ந்தேன்.இப்போதும் அங்கே தான் என் பெற்றோரை காண சென்றுள்ளேன்.
உங்கள் கதை ,பல விதத்தில் எனக்கு தொண்டையை அடைத்தது.
சீதா
எச்சில் என்ற கருதுகோள்கள் இல்லை. …
மனம் நெகிழச்செய்யும் ஆழ்ந்த நட்பின் ஈரம் அதில் உள்ளது
– ஜெயமோகன்
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவன்தான் இட்டஊன் எனக்கினிய
-சேக்கிழார்
இருவர்க்கும் நன்றி
டில்லி துரை
அன்புள்ள ஜெ
பழைய கட்டுரைதான். சமீபத்தில்தான் வாசித்தேன். ஆனால் அழிமுகம் மீண்டும் வாசிக்கும்போது மனம் கனக்கச்செய்கிறது. பெண்களின் வாழ்க்கையைப்பற்றிய் அந்த சித்திரம். அதிலுள்ள கனிவு. அன்னையை கண்டுகொண்ட தருணம்
வணக்கம் ஜெ. வேறொன்றும் சொல்வதற்கில்லை
முருகேசன்
அன்புள்ள ஜெயமோகன்
அழிமுகம் மனதை பாதித்தது. அதில் கதைகளில் இல்லாத ஒரு நேரடித்தன்மை உள்ளது. சுருக்கமாகச் சொல்லிச்செல்கிறீர்கள். சீரோ நெரேஷன் என்றால் இதுதான். முன்னுதாரணமாகவே சுட்டிக்காட்டலாம். சும்மா டைரிக்குறிப்பை எல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வாழ்க்கையே கண்முன் விரிந்தது
சாரங்கன்
ஜெ,
அழிமுகத்தில் என்னைக் கவர்ந்தது ஒன்றே. மலக்குழி போன்ற அந்த இடந்த்தில் இருந்தபடி உங்களை ஆசீர்வதிக்கும் அந்த மௌல்வி. அவர் அமர்ந்திருக்கும் ஞானம் அபாரமானது
வணக்கம்
அருணாச்சலம்