கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

வினவு பற்றிய தங்கள் பதிவை படித்தேன். பல காலமாக
வினவு தளத்தில் வாதாடி, இனி அது வீண் வேலை என்று
உணர்ந்து கொண்டேன். The final clincher was the
Post about சு.ரா, நினைவின் நதியில் பற்றிய பதிவு. மிக மிக
ஆழமான, நுண் உணர்வுகள் கொண்ட மற்றும் மிக மெலிதான,
அன்பான நினைவுகளை, மிக மேலோட்டமாக, நேர்மையில்லாமல்,
ஒரு கசாப்பு கடைக்காரனை போல குதறியிருந்தார்கள்.

அதை பற்றி கூகுள் பஸ்ஸில் நான் இட்ட பின்னூட்டம் :

”மிக மேலோட்டமான, கேவலாமான கட்டுரை.

ஆமா. இவங்க மட்டும் தான் ஒரிஜினல். மற்ற அனைவரும்
போலிகள் மற்றும் பிற்போக்குவாதிகள். கடந்த 60 வருடங்களில்
தமிழ் சிறுபத்திரிக்கையாளர்கள் எதுவும் உருப்படியாக சாதிக்கவில்லை.
எல்லோருமே வேஸ்ட். – இப்படினு நீங்களே சொல்லிக்கிட்டு திரியுங்க..

ஜேமோவின் ‘நினைவின் நதியில்’ நூலில் இருந்து மிக முக்கியமான
பகுதிகளை எடுத்துகாட்ட வில்லை. சிறிதும் நேர்மை இல்லாத கட்டுரை.
சு.ரா, தலித் எழுச்சி பற்றி தமது மகிழ்ச்சியை வெளிபடுத்திய பல
சந்தர்பங்கள், பெரியார் பார்பானர்களை குற்றம் சாட்டியது பற்றி,
பார்பனீயம் பற்றி சொன்ன கருத்துகளை எடுத்து காட்டவில்லை.
சங்கராச்சாரியார், ஜெ பற்றிய கருத்துக்கள்.

மிக அருமையான அந்நூல் இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும்
இருக்கும். ஆனால் உங்க ‘கட்டுரைகள்’ இருக்குமா ? “

மதவாதத்தை ஒத்த கூச்சல் என்று நீங்கள் வருணித்தது மிக சரிதான்.


Regards / அன்புடன்

K.R.Athiyaman / K.R.அதியமான்
Chennai – 96

http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
http://athiyaman.blogspot.com (english

உங்கள் செட்டிநாட்டுமருமகள்மான்மியம் குற்றாலஅருவியில்குளித்த
அனுபவம்போலிருந்ததுகவிதைமருமகள்வருணித்தகுணங்களைகொண்ட
மருமகள்களும்எண்ணற்றவர்கள் உள்ளார்கள்.ஏன் அம்மாதரியானமருமகள்களைப்பற்றியும் திருநெல்வேலிபாசையில்
புனைந்து எங்களை அசத்தக்கூடாது
ந்ன்றி
அ.ஜெகதீசன்
மதுரை

முந்தைய கட்டுரைகல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2
அடுத்த கட்டுரைபுதுக்கோட்டை கடிதங்கள்