அன்புள்ள ஜெயமோகன் சார்
இன்றைக்கு வெளியான கட்டுரை நாம் அவர் என்னும் கட்டுரை முக்கியமானது. எல்லா அரசியல்வாதிகளும் இன்றைக்கு எதிரிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் கூட அதைத்தான் செய்கிறார்
மக்களை தொகுத்து ஒற்றுமையுடன் வாழ வழிசொல்லும் அரசியல்வாதிகளே அரிதாகிவிட்டார்கள்
சாம்பசிவம் எஸ். ஆர்
***
பொம்மைகளின் அரசியல் கட்டுரை சிந்திக்க வைக்கும் கட்டுரை, போலி விளம்பரம் எப்படி நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெளிவாக விளக்குகிறது. அருமை
குமார்
***
மதிப்பிற்குரிய ஐயா ஜெய மோகன் அவர்களுக்கு,
தங்களுடைய கட்டுரை மிக அருமை. இப்படியும் ஒரு அரசியல் உள்ளது என்பதை நான் இன்று தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்…
தங்களது கட்டுரைக்கு நன்றி..
உண்மையுடன்
த பிரசன்னா
***
அன்புள்ள ஜெ
படிம அரசியம் முக்கியமான கட்டுரை. அதை வாசித்தபோது ‘அட இதை நானே இத்தனை தெளிவாக பலமுறை யோசித்திருக்கிறேனே என்று எண்ணினேன். ஆனால் இதை என்னால் சரியான சொற்களால் சொல்லிக்கொள்ள முடியவில்லை. உங்கள் கட்டுரைகளின் சிறப்பே அதுதான்
ஜெயச்சந்திரன்