தினமலர் 21 எதிரும் புதிரும்

தினமலர் , எதிரும் புதிரும்   Yathi

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்!
நான் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதியதில்லை. இப்பொழுது கூட முதல் முறையாக தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
நீங்கள் தினமலரில் எழுதும் “ஜனநாயகத்தின் சோதனைச்சாலையில்” என்ற பகுதியை தவறாமல் வாசித்து வருகிறேன்.
மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுடைய நடுநிலையான பார்வை மேலும் மேலும் தங்களின் இந்தத் தொடரை வாசிக்கத் தூண்டுகிறது.
தங்களுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கும் நான் ஒன்றும் பெரிய பிரபலம் அல்ல‌. ஒரு சாதாரண வாசகி தான். இருப்பினும் தங்களுக்கு இதை தெரியப்படுத்தவேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.
இன்றைய தினமலரில் வெளியான “ஓப்பியமும் முதலாளித்துவமும்”  என்ற கட்டுரையைப் பற்றி என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய முதலாளித்துவத்தின் வரலாற்றைப் பற்றிய தகவல் எனக்குப் புதிதாக இருந்த்தது. டாடாக்களும் பிர்லாக்களும் இப்படித்தான் உருவானார்கள் என்று அறிந்து கொள்ள மிகவும் திகைப்பாக இருக்கிறது. விவேகானந்தரின் அறிவுறுத்தலின் பேரில் ஜாம்ஷெட்ஜி டாடாவால் உருவாக்கப்பட்ட இந்திய அறிவியல் கழகம்(Indian Institute of Science) இன்றும் கம்பீரமாக கல்விப் பணியை சிறப்பாக செய்துவருகிறது. காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த பாதையில் சமுதாயப் பொறுப்புணர்ச்சியோடு அவர்கள் செயல்பட்டது நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டது. ஆனால் இன்றோ Corporate Social Responsibility Act என்ற சிறப்பு சட்ட அமலாக்கம் தேவைப்படுகிறது.
அதே நேரத்தில் இடது சாரிக் கொள்கை எந்த அளவிற்கு ஒரு நாட்டின் சீரான வளர்ச்சிக்குத் தேவை என்பதைத் தாங்கள் விளக்கிய விதம் எனக்கு பிடித்திருந்தது.தாங்கள் பல்வேறு நூல்களை சீராய்ந்து சலித்துக் கொடுக்கும் பாங்கு என்னுள் ஒரு புதிய பார்வையை உருவாக்கியிருக்கிறது.
நான் இந்திய ஆட்சிப் பணித் தேர்விற்குத் தயாராகி வருகிறேன். அந்த தேர்விற்குத் தேவையான பகுப்பாய்வுப் பார்வை தங்களது கட்டுரைத் தொடரின் மூலம் கிடைக்கிறது.
மிக்க நன்றி!!
இந்துமதி

 

இரண்டுக்கும் நடுவே. நான் சிறு முதலாளியாக இருப்பதனால் ஒரு அளவு‌க்கு வலதுசாரி மனோபாவம் தெரியும். இயன்றவரை ஊழியர்களை பிழிந்து தன்னலம் சார்ந்த விஷயங்களுக்காக அதீத முக்கியதுவம் கொடுப்பவர்கள் மிக அதிகமாக ஆகி விட்டார்கள்.

90 களுக்கு பிறகு  இருக்கும்   வாழ்வியல் சுழல் இதற்காக பெரும் காரண‌ம். இந்நிலையில் இதே trend இருந்தால் ருஷ்யா போல அதிகமான கோடீஸ்வரர்கள் மிக மிக அதிகமாக  ஏழைகள் இருக்க கூடிய நிலை லரும்.

இந்த நிலை வரும்போது இடதுசாரி சிந்தனை இந்நாட்டிற்கு முக்கிய தேவை. உண்மையான இடதுசாரிகள் அரிதான காலத்தில் வாழ்கிறோம். சொல்ல போனால் அடுத்தவர்  பசி உணர்ந்தவன் இடதுசாரி என்னளவில்.

நடராஜன்

முந்தைய கட்டுரைகேரள அரசியலும் ஆதிக்கசாதியினரும்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16