அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய “எதுநாளைய ஊடகம்” கட்டுரை வாசித்தேன். இனறைய சமூகததில் ஊடகங்களின் நிலையையும், சமூக ஊடகங்களின் பங்களிப்பையும் அருமையாக கூறியிருந்தீர்கள்.
இன்று முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பலர் தனக்கு வரும் செய்தியை வாசித்து கூடப்பார்க்காமல் பிறர்க்குப் பகிர்கிறார்கள். அதன் உண்மைத் தன்மையைப் பற்றி எவரும் கவலைப் படுவதில்லை. அவற்றில் பெரும்பாலும் நீங்கள் சொன்னதுபோல வேண்டுமென்றே யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு மற்றவர்களால் பரப்பப் படுகிறது. இத்தகைய நிகழ்வுகளால் முகநூல் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனை நெறிமுறைப் படுத்த அரசு எதுவும் செய்ய இயலாதா?
பிரியமுடன்,
பிரபா,
கோவை.
அன்புள்ள பிரபா
எந்த ஊடகத்தையும் ஜனநாயகத்தில் கட்டுப்படுத்த முடியாது – கூடாது
அதைப்பற்றிய ஒரு தெளிவு உருவானாலே போதுமானது, கட்டுப்பாடு உருவாகிவிடும்
***
ஜெ
இன்று தினமலர் கட்டுரை படித்தேன். இன்றைக்கு பரபரப்பு மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது. அமைப்பு இல்லாத ஊடகங்கள் மென்மையான மனிதர்களை காயப்படுத்தி முற்றிலும் அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது trend. விளைவு நல்லவர்கள் ஒதுங்க தீயவர்கள் ஆள .
இளைஞர்கள் வரலாறு அறிய வேண்டிய அவசியம் வீட்டில் சொல்லப்பட வேண்டும். வாசிப்பு நேசிப்பு ஆக மாற வேண்டும்.
நடராஜன்