இனியவை -கடிதங்கள்

 

Uday Single

 

அன்பின் ஜெயமோகன்,

இனியவை திரும்பலில் நீங்கள் இளமைக்குச் சென்று திரும்பினேன் என்று எழுதி இருக்கிறீர்கள். முதுமை வந்து விட்டதா என்ன ? :)

எனக்கு ‘புறப்பாடு’ ஞாபகம் வந்தது. அதைப்  படிக்கும் போது, முதல் தொகுதியில் வரும் உங்கள் நண்பர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதுதான் ஆர்வமாக இருந்தது. எப்போதாவது இயல்பாக அது உங்கள் எழுத்தில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

– உதயசங்கர்

 

rrrrrrrrrrrrrrrrrrr

சார்,

இனியவை திரும்பல் வாசித்தேன் . அதிலிருந்த லிங்க் வழியாக பிரிவின் விஷம் பதிவையும். இரு எல்லையும் பார்த்துருக்கீங்க ….

உங்கள் உற்சாகம் (இனியவை திரும்பல்) எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, வாழ்த்துக்கள் சார்.

ராதாகிருஷ்ணன்

***

ஜெ

புகைப்படங்களில் அந்த உற்சாகம் தெரிகிறது. கே சி நாராயணனைப்பற்றி நீங்கள் முன்பே எழுதியிருக்கிறீர்கள். அந்த முகம் இப்போது தான் வந்து சேர்ந்தது இரவு பகலாக இலக்கியம் பேசிய நாட்கள் என்ற வரி பெருமூச்சை வரவழைத்தது. இங்கே சம்பந்தமே இல்லாத ஒருநாட்டில் சம்பந்தமே இல்லாத ஒரு பண்பாட்டின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும்போது அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை தேவை என்றுதான் சொல்லத்தோன்றியது

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெமோ

பத்மநாபபுரம் அரண்மனை எனக்கு மிகவும் பிடித்தமான இடம். அங்குள்ள அந்த கட்டுப்படுத்தப்பட்ட ஒளியின் ஜாலத்தை கண்மூடினால் இப்போதுகூட உணரமுடிகிறது. குறிப்பாக அந்த மந்த்ராலோசனை சபையின் குளுமையும் ஒளியும் மறக்கமுடியாதவை ஒரு கட்டுரை எவ்வளவு நினைவுகளை எழுப்புகிறது

செல்வா

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17
அடுத்த கட்டுரைஅழிமுகம்