தினமலர் – 14: யானைநடை

Tamil_News_large_1481446

 

ஜெமோ

இன்றைக்கு வந்த யானைநடை கட்டுரை வாசித்தேன்

தினமலரில் காலை எழுந்ததும் வாசிப்பதே உங்கள் தொடர் கட்டுரைகளைத்தான். வெறுமே அரசியல் என்றில்லாமல் எதையாவது நாள் முழுக்க சிந்திக்கிறதுபோல சொல்லிவிடுகிறீர்கள்

நானும் இளமையில் எல்லாம் சர்வாதிகார முறைப்படி வேகமாக நடக்கவேண்டும் என நினைத்தவன் தான். ஒருநாள் முதல்வனாக என்னை நானே கற்பனை செய்துகொள்வேன். ஒருநாளில் எல்லாவற்றையும் சரிசெய்யமுடியும் என உண்மையிலேயே நம்பினேன்

இன்றைக்கு ஒரு பிஸினஸைச் செய்யும் போதுதான் உண்மையில் எந்த ஒரு ஆக்கபூர்வ விஷயமும் நான்கு கோணங்களில் யோசித்து மெல்லமெல்லத்தான் செய்யமுடியும் என்பதை அறிகிறேன்

என் வாழ்க்கையையே மாற்றியது அந்த அறிவு. அதை இன்றைக்கு வாசித்தபோது உடனே எழுதணும் என்று தோன்றியது

செல்வராஜன்

***

தினமலர் தொடர் கட்டுரைகள் பெரிய கண் திறப்பு சார், இக்கருத்துக்கள் பல்வேறு தருணங்களில் உங்களிடம் கற்றவையே எனினும் தேர்தல் நெருக்கத்தில் புதிய ஒளி தருகிறது. தேர்தலுக்கு முன் புத்தகமாக கிடைத்தால் ஒரு 50 பிரதிகள் விலைக்கு வாங்கி நண்பர்களுக்கு அளிக்க ஆர்வமாக உள்ளேன்.

நன்றியுடன்

மு.கதிர் முருகன்

திருப்பூர்.

 

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

நான் பலமுறை யோசித்ததுண்டு. ஏன் ஜெயமோகன் போன்ற கருத்தாளுமை மிக்க எழுத்தாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு கொள்வதில்லை என்று, இன்றைய தினமலரில் தாங்கள் எழுதியுள்ள விளக்கம் அதை தெளிவு படுத்தியது. வறட்டு விதண்டாவாதிகளையே ஏன் விவாதத்திற்கு அழைக்கின்றனர் என்று பலமுறை யோசித்ததுண்டு, இது ஊடக அரசியல்வாதிகளின் தந்திரம் என்ற கோணத்தில் இதுவரை சிந்தித்தது இல்லை. “ஜனநாயக சோதனைசாலையில்” தங்களின் இன்றைய கட்டுரையை படித்து முடித்த கணம் இதுவரையில் ஆர்வமுடன் பார்த்த அரசியல் விவாதங்கள் அனைத்தும் எனது பொன்னான நேரத்தை விரயம் செய்தவை என்றுணர்ந்தேன். இன்று முதல் அரசியல் விவாதங்களை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். தங்களின் இன்றைய விளக்கம் எனது நேர மேலாண்மையில் மாற்றம் செய்ய வைத்துள்ளது.

நன்றி.

ப. இரவிச்சந்திரன்

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

14 யானைநடை

13-அரசியலின் இளிப்பு

12-வாக்காளராக வயதுக்கு வருதல்

11-உறிஞ்சும் பூச்சிப்படை

10-நமது செவியின்மை

9-ஊழலின் அடித்தளம்

8-யாருடைய கூலி பெறுகிறார்கள்?

7-வயிற்றைப்பற்றிப்பேசுங்கள்

6-ஏன் கத்துகிறார்கள்?

5-பேச்சுரிமை எதுவரை?

4-ஜனநாயகம் எதற்காக?

3-குற்றவாளிகள் யார்?

2-தனிமனிதனின் அடையாளக்கொடி

1-ஜனநாயக ஒழுக்கம்

 

முந்தைய கட்டுரைமுள்வில்லில் பனித்துளி அம்புகள்
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள்