வாக்காளர்களாக வயதுக்கு வருதல் தலைப்பே ஒரு punch . கல்வி கசந்தற்கு காரணம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி திட்டத்தை வடிவமைப்பமைவர்கள் தான்.
ஒரு நாட்டை எதற்காகவும் பிரிக்கக் கூடாது என்பது தான் முக்கியம்.
உங்கள் கட்டுரையின் கடைசி நான்கு பத்திகள் மிக அருமை.
கண்களை நோக்கி சொல்லும் காலம் வரும்.
நடராஜன்
ஆசிரியருக்கு ,
வணக்கம். நீங்கள் ஜனநாயகம் குறித்து எழுதும் கட்டுரைகள் நன்றாக உள்ளன. இன்றைய சூழலுக்கு தேவையான உரையாடல். ஜனநாயக மனநிலை சார்ந்த மரபென்பது அரசு நிர்வாகத்துக்கும்,அன்றாட வாழ்வுக்கும் வந்தால் நல்லதே.
அமெரிக்கா ஒரு மூத்த ஜனநாயக நாடு. ஜனநாயகத்தினை உருவாக்கி கொள்ளும் பொழுது அது சந்தித்த சிக்கல்கள் நிறைய இருந்தன.
பெடரலிஸ்ட் பேப்பர்ஸ் என்பது ஜேம்ஸ் மேடிசன், அலெக்சாண்டர் ஹேமில்டன் , ஜான் ஜே என்ற மூவரால் அமெரிக்க அரசியலமைக்கு மக்களிடம் ஓப்புதல் கோரி எழுதப்பட்ட கட்டுரைகள். இவை ஜனநாயகத்தின் துவக்கம் குறித்த நல்ல வாசிப்பை தரும். உங்கள் ஜனநாயக கட்டுரைகளை தொடர்ந்து படித்த ஒரு வாசகர் மார்க்ஸ் படிக்க, கம்யூனிசம் படிக்க என பரிந்துரைகளை கேட்டு இருந்தார். அதை விட ஜனநாயகத்தின் தோற்றுவாயையும், தோற்றுவாய் சிந்தனை மரபையும் படிக்கையில் இன்னமும் கூடுதல் உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன். ஜனநாயக மரபு வாழ்வே வெறும் முரணியக்கம் என சுருக்காது. அதை வாசிக்கும் இளைஞர்களை நல்ல முதிர்ச்சியுடன் சமூகத்தினை அணுக உதவும்.
உதாரணத்துக்கு மிக புகழ் பெற்ற பெடரலிஸ்ட் பேப்பர் 10 என்பதை உங்கள் கவனத்துக்கு இணைத்துள்ளேன்.
அன்புடன்
நிர்மல்
தினமலர் கட்டுரை இணைப்புக்கள்