தினமலர் கடிதங்கள் 2

Tamil_News_large_1481446

செவியில்லாமை படித்தேன்.  ஒரு மாற்றுக்கருத்து. அண்டை மாநிலமான கேரளாவில்   சாமானிய மக்கள் அரசியல் நன்கு அறிவார்கள். அங்கு  அடிப்படையான அறிவும் ,தெளிவும் அதிகம்.  அங்கு இத்தனை ஆடம்பரமாக  ஏன் இங்கு வாழும் கவுன்சிலர் அளவுக்கு கூட  ஒரு மந்திரி வாழ முடியாது. அதற்கு இடதுசாரி கட்சிகளின் பங்கு  மகத்தானது .ஏன் வடக்கே  டெல்லியில் ஷீலா தீட்சித் தோல்வி அடைந்தாரே.  AAP செய்த செலவு மிக மிக குறைவு.

இங்கேயே பர்கூரில் யானை காதில் எறும்பு போனதே இருபது ஆண்டுகளுக்கு முன்.

தமிழ் நாட்டில்  M.S.உதயமூர்த்தி  போன்றோர் முயன்று தோல்வி தழுவினர்.நல்ல கண்ணு பலமுறை தோற்று  போனார்.

உணர்ச்சிப் கொந்தளிப்பான நாடகங்கள் பார்த்து மனம்பதைப்பது, திருமங்கலம் formula க்கு  விலை போவது , இலவசங்கள் மீது ஆசைப்படுவது  போன்ற பிறழ் மனபான்மையை மாற்றும் வல்லமை படைத்த ஒரு தலைவன் வந்தால் நிலை மாறும்.

நடராஜன்

ta032155

வணக்கம்!!

உங்கள் கட்டுரைகள் சிலவற்றை ‘தினமலர்-தேர்தல் களம்’ பகுதியில் படித்தேன்.நன்றாக இருந்தது.இது போன்ற கட்டுரைகள் என்னைப் போன்ற இளம் வாக்காளர்களுக்கு தேர்தல் மற்றும் அரசியல் பற்றிய சரியான புரிதல்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

                எனக்கு பொருளாதாரம் மற்றும் கம்யூனிசம் பற்றி தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் உண்டு.எளிய நடையில் தமிழிலோ (அ) ஆங்கிலத்திலோ இவை பற்றிய சிறந்த புத்தகங்களை தாங்கள் எனக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

                             -நன்றி-

கோபிநாத் வெங்கடேஸ்

அன்புள்ள கோபிநாத் வெங்கடேசன்

தமிழில் சிறந்த பல தொடக்க நூல்கள் உள்ளன

தியாகு எழுதிய ‘ மார்க்ஸியம் ஆனா ஆவன்னா’ தெளிவான ஒரு தொடக்கநூல். மொழியாக்க நெடி இல்லாத நல்ல தமிழில் எழுதப்பட்டது [புதுமலர் படைப்பகம்,]

ஆனால் அதற்கு முன் எஸ் நீலகண்டன் எழுதிய  ‘ ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை : செவ்வியல் அரசியல் பொருளாதாரம்’ என்னும் நூலை வாசிப்பது நல்லது. [காலச்சுவடு பிரசுரம்]

இந்நூலைப்பற்றி நான் எழுதிய கட்டுரை பொருளின் அறமும் இன்பமும்

ராஜேந்திரசோழன் எழுதிய  மார்க்சிய மெய்யியல் [ தமிழினி பதிப்பகம்] ஒரு முக்கியமான தொடக்க நூல்.

மூலதனமே ஜமதக்னியாலும், தியாகுவாலும் மொழியாக்கம்செய்யப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது

ஜெ

தமிழில் மார்க்ஸிய நூல்கள் ஒரு பட்டியல்

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

11. உறிஞ்சும் பூச்சிப்படை

10 நமது செவியின்மை

9 ஊழலின் அடித்தளம்

8 யாருடைய கூலி பெறுகிறார்கள்?

7 வயிற்றைப்பற்றிப்பேசுங்கள்

5 பேச்சுரிமை எதுவரை?

4 ஜனநாயகம் எதற்காக?

3 குற்றவாளிகள் யார்?

2 தனிமனிதனின் அடையாளக்கொடி

1 ஜனநாயக ஒழுக்கம்

 

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு -கோவை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 6