நாஞ்சில்நாடனின் இணையதளம் பலமடங்கு வளர்ந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனக்கு சிறில் போல அவருக்கும் ஓரு வாசகநண்பர் அமைந்திருப்பது இலக்கியத்தில் அற்புதம்தான்
’ஆளாளே கேட்டார்கள், ‘செம்மொழி மாநாட்டுக்குப் போகலியா?’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ எனக் கேட்டது உள்மனம். ஆய்வரங்குகளில் அமர்ந்து செவிமடுக்க ஆசைதான். அரங்கில் பார்வையாளராக அமர்ந்தவர் கூட்டுத் தொகை மூன்றிலிருந்து நான்காக உயர்ந்திருக்கக் கூடும்’
நாஞ்சிலுக்கே உரிய நையாண்டி. தகவலறிவும் நகைச்சுவையும் அவதானிப்புகளும் சரிவிகிதத்தில் கலந்த இக்கட்டுரைகளுக்கு ஈடுசொல்ல தமிழில் அ.முத்துலிங்கம் எழுத்துக்கள் மட்டுமே
http://nanjilnadan.wordpress.com