புதியவாசகர் சந்திப்பு -கோவை

 

1

நண்பர்களுக்கு

கொல்லிமலைச் சந்திப்பு அறிவிக்கப்பட்டபோது கிட்டத்தட்ட பத்துபேரை தவிர்க்கவேண்டியிருந்தது. இடமில்லை. ஆகவே அடுத்த சந்திப்பை அறிவிப்பதென முடிவுசெய்திருந்தோம்

வரும் ஏப்ரல் 9, 10 [சனி ஞாயிறு] கிழமைகளில் கோவை நகரிலேயே ஒரு புதிய வாசகர் சந்திப்பை ஒருங்குசெய்ய முடிவுசெய்திருக்கிறோம். பெண்கள் விரும்பினால் வந்துசெல்ல வசதியாக நகருக்குள்ளேயே சந்திப்பு ஏற்பாடாகியிருக்கிறது

இது புதியவாசகர்களுக்கான சந்திப்பு. ஆகவே இதுவரை சந்திப்புநிகழ்ச்சிகளில் பங்குகொள்ளாதவர்கள் கலந்துகொள்ளலாம். என் படைப்புகளை வாசித்தவர்களுக்குரியது இச்சந்திப்பு. அவ்வாசிப்பு அளிக்கும் வினாக்களை நேரடியாக கலந்துரையாடல் மூலம் உசாவுவதற்கான தருணம்.

வரவிழைபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பி சப்மிட் செய்யவும்

கோவை சந்திப்பு – விண்ணப்ப படிவம்

அல்லது தங்களைப்பற்றிய தகவல்களுடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல். தங்கள் பெயர், முழுவிலாசம், தொலைபேசி எண் ஆகியவற்றை [email protected]  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்

 

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள் 2