தினமலர் – 6:ஏன் கத்துகிறார்கள்? கடிதங்கள்-1

Tamil_News_large_1481446

இன்றைய தினமலரில் ஏன் கத்துகிறார்கள் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை மிக முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. சாதி, இனம், மதம், மொழி சார்ந்த அடிப்படைவாதம் பேசுபவர்கள்தான் கத்திக்கூச்சல்போடுகிறார்கள். முன்பெல்லாம் திராவிட இயக்கவாதிகள் கத்தினார்கள். இன்றைக்கு இந்துத்துவாக்கள் இரு மடங்கு கத்திக்கொண்டிருக்கிறார்கள். கத்துவது ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்பச்சொல்லி மண்டையில் ஆணி அடிப்பதற்கும், தர்க்கப்பிழைகளை மறைப்பதற்கும். பொருளாதராத்திட்டங்கள் இல்லை என்பதை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும்தான். வெறியேற்றியே அரசியலில் வெல்கிறார்கள் இந்த வாயாடிகள்

செல்வன்

***

ஏன்  கத்துகிறார்கள்?  ஹிட்லரின் பேச்சு வன்மை  கலை பற்றி படித்த பின் கிட்டத்த 50 வருடம் ஏமாந்த அறிவியல் உறைக்கிறது. அதிகமாக பேசாத ராஜாஜி, காமராஜர், கக்கன் போன்றவர்கள் மனதில் வந்து செல்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் பேச தெரியாத ஒருவர்   பதவிக்கு வருவது கடினம். ஆனால் கண்டிப்பாக வந்த பின்னர் ஏமாற்றி வாழ்வது அதைவிட கடினம். அதற்கு இங்கு நிலவும் அறியாமையே காரணம்.

இருப்பினும் பெர்லின் சுவரை போல சரிந்து அழிந்து போனது ஹிட்லரின் கயமை. ஆனால் மண்ணில் மறைந்து 70 வருடம் ஆன பின்னும் உலகம் எங்கும் உளமார உச்சரிக்க படுவது காந்தி தான். அவரது வழி முறையே சிறந்ததாக இன்றும் கூட இருக்கிறது.

இந்த சிந்தனையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நீங்கள் காந்திய சிந்தனை பற்றி எப்போது எழுதினாலும் படிக்கும்  போது ஒவ்வொரு முறையும் கண்கள் பனிக்கிறது.

உங்களுடைய இந்த தொடர் மேலும் கீழும் அசைத்தாலும் வாசிக்க வாசிக்க யோசிக்க வைத்து கொண்டே இருக்கறது. ஆனால் ஒரு போதும் நம்பிக்கையை போக்கவில்லை.

நடராஜன்

***

ஏன் கத்துகிறார்கள்? இந்த தலப்பில் இன்றைய தினமலர் தேர்தல் கள இணைப்பில் தாங்கள் ஹிட்லரின் பிரசார உத்திகளைப் பற்றி வில்லெம்ர்ஹீச் சின் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

ஹிட்லர் என்ற இடங்களில் திராவிடர் தலைவர்கள் யார் பெயரையும் வைக்கலாம். சிறுபான்மை என்ற இடத்தில் பார்ப்பன சமுதாயத்தினைச் சுட்டலாம் என்பது நீண்டகாலமாக சமுதாய அறிவியல் படிப்பில் மற்றும் படைப்பில் திளைக்கும் தாங்கள் ஏற்பீர்கள் அல்லவா? “விளம்பரம் செய்.உரக்கக் கூச்சலிடு.” விக்ஞானபூர்வ விளம்பர உத்தியாக காலம்காலமாக அனைவராலும், ஆம் சமுதாய நன்மைக்காக சிந்தித்தவர்கள், அதற்கு மாற்றான கருத்து கொண்டவர்கள் மற்றும் அதற்கு எதிரானதாக செயல்பட்ட சமூக விரோதிகளும் பயன்படுத்தி வரும் தொழில் நுட்பம்.

இன்று மேடைப்பேச்சுக்குப் பதிலாக வீடியோ பதிவுகள் கூடிய சமூக வலைதளங்கள் இந்த பிரசாரங்களுக்கான தளமாக உள்ளன. உண்மை எது பொய் எது என்று அறிந்து கொள்ளவும் இயலாது. அறியவும் விடாது. என்னதான் கல்வியறிவு பெற்றாலும் மந்தைமனநிலை மாறாது. தனித்திருப்பவன் அவ்வாறு விழித்திருப்பதாலேயே பசியுடன்மட்டுமே இருப்பான்.

அன்புடன்

கிரிதரன் பிரான்

மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை

சென்னை-91

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய “ஏன் கத்துகிறார்கள்?”கட்டுரையில் உள்ள ஒவ்வொரு கருத்தும் அப்பட்டமாக நமது நிகழ்கால தமிழக அரசியலை(1967 க்கு பிறகு)தோலுரித்து காட்டியுள்ளது.இந்த திராவிட(?!)அரசியல் நடத்துபவர்க்கெல்லாம் ஆசான் நான்(ம்) “ஒருவர்” என்று,இதுவரை ஒரு “பேரறிஞரை“(?) நினைத்துக்கொண்டிருக்க! இவர்களுக்கெல்லாம் மாபெரும் ஆசான் ஹிட்லர்தான் என்று இப்போது புரிகிறது!.

அடுத்ததாக தொலைக்காட்சி ஊடங்களில் நடந்துவரும் அரசியல் விவாதங்களை (ஆங்கிலம்-தமிழ்) அக்கறையோடு இது நாள்வரை தூக்கத்தை தொலைத்து பார்த்து வந்துகொண்டிருந்த எனக்கு தங்கள் கருத்து “சம்மட்டி அடியாக” தெளிவைத் தந்தது.

நன்றி,

அன்புடன்,

அ .சேஷகிரி.

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

6-ஏன் கத்துகிறார்கள்?

5-பேச்சுரிமை எதுவரை?

4-ஜனநாயகம் எதற்காக?

3-குற்றவாளிகள் யார்?

2-தனிமனிதனின் அடையாளக்கொடி

1-ஜனநாயக ஒழுக்கம்

முந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-4
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 1