ஜனநாயகம் என்பதும் தனிமனிதவாதம் என்பதும் ஒன்றுதான் என்று வாதம் செய்த கட்டுரை சிறப்பான ஒன்று. தனித்தனியாக சிந்தித்து ஓட்டு போட்டால் மட்டுமே ஜனநாயகம் சிறக்கும் என்பது உண்மைதான். சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் எழுதப்பட்ட ஒரு நல்ல கட்டுரை.
சாமி
***
முதல் தேர்தல் பற்றிய வரலாற்றுச்செய்திகளைச்சொல்லி அதன் வழியாக அடிப்படையான தகவல்களை உணர்த்திய கட்டுரை. தனிமனிதனே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை சிந்தித்துப்பார்க்கையில் உண்மையாகவே தெரிகிறது
ராஜன் மகாதேவன்
***
ஆழமான கட்டுரை. ஆனால் சுருக்கமானது. அனைவரும் யோசிக்கவேண்டிய ஒரு கருத்து. மேலோட்டமாக மக்களை குறை சொல்வதை விட்டுவிட்டு ஜனநாயக வளர்ச்சிப்பாதையில் உள்ள முக்கியமான குறைபாடு ஒன்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
நன்றி
செல்வராஜ்