ஆடும் கூத்து

அன்புள்ள ஜெ

சமீபத்தில் இந்த பதிவை பார்த்தேன்

http://nvmonline.blogspot.com/2010/08/blog-post_08.html

நீங்கள் ஒரு இணைப்பிலே டி.வி.சந்திரன் என்ற மலையாள எழுத்தாளாரைப்பற்றிச் சொன்னீர்கள். அந்த சந்திரன் தான் இந்தப்படத்தை இயக்கியவரா?

சரவணன்

அன்புள்ள சரவணன்

ஆமாம். சந்திரன் இயக்கிய இரண்டாவது படம் இது. முதல்படம் ஹேமாவின் காதலர்கள். இந்தப்படத்தில் என் நண்பர் சுகா வசனங்களில் உதவிசெய்திருக்கிறார். என் இப்போதைய மலையாளப்பட இயக்குநர் மதுபால் அதில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்

படத்தை ’கிரீடம்’ உண்ணி தயாரித்தார். அவர் பாதியில் கைவிட்டதாகவும் மிச்சத்தை சேரன் தயாரித்து முடித்ததாகவும் சொல்கிறார்கள். படத்தை சிறிது மாற்றவேண்டும் என சேரன் கேட்டதாகவும் இயக்குநர் மறுத்ததால் படம் வெளிவரவேயில்லை என்றும் சொன்னார்கள்

எப்படி இணையத்தில் வெளிவந்தது? குறுந்தகடாகவே வந்துவிட்டதா? தெரியவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைகாடு -கடிதம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்