நான் படித்த, பார்த்த மகாபாரதங்களில் எல்லாம் துரியோதனன் ஒரு வில்லன். முழுக்க முழுக்க எதிர்மறைக் குணங்கள் மட்டுமே நிறைந்த ஒருவன். வெண்முரசின் மொழியில் சொன்னால் இருளின் தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஆனால் வெண்முரசு காட்டும் துரியோதனன் முற்றிலும் வேறானவன். அவன் எதிர்மறை நாயகனே இல்லை. நல்லவன், அன்பானவன், பெருந்தன்மையானவன், சற்றே அதீதமான ஆணவம்(ego) கொண்டவன், பேரரசன். அவன் பிறக்கையில் அவனைப் பற்றி எதிர்மறை எண்ணங்களே மிகுந்துள்ளன.