வானதியும் வல்லபியும் – ஒரு கனவின் ஈடேற்றம்

 

11BACK

சில ஆண்டுகளுக்கு முன்பு என் பிரியத்திற்குரிய வானவன் மாதேவியும் இயலிசை வல்லபியும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு தங்குமிடம் அமைக்க முடிவெடுத்தபோது எனக்குத் தோன்றியது கடும் சினம்தான். அவர்களின் உடல்நிலை எனக்குத்தெரியும். அந்த அழுத்தம் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் என்பதற்கு அப்பால் எனக்கு ஏதும் எண்ணத்தோன்றவில்லை. ஒரு தந்தையின் இடத்திலன்றி அவர்களை நான் பார்க்க முடிந்ததில்லை

ஓர் இலட்சியம் எத்தனை பெரிய இன்பத்தை அளிக்கும் என்றும் அதில் செலுத்தப்படும் உழைப்பளவுக்குக் களியாட்டம் வேறல்ல என்றும் எனக்குத்தெரியும். என்றாலும் வழக்கமான தந்தைகளைப்போல அதையெல்லாம் வேறுபிள்ளைகள் செய்துகொள்ளட்டும் என்ற நிலையைத்தான் உள்ளம்சென்றடைந்துகொண்டிருந்தது. இன்று அவர்கள் அக்கனவை முடித்திருக்கிறார்கள் என்று காணும்போது அந்த எதிர்மனநிலை உடனடியாக மறைந்து ஒரு சொந்தச்சாதனைபோல உணரச்செய்கிறது

IMG-20160221-WA0001(1)

சென்ற சில ஆண்டுகளாக வல்லபியும் வானதியும் அதற்காகப் பட்ட அல்லல்கள், அர்ப்பணிப்புள்ள உழைப்பு உளம்சோர்ந்து சிறியவாழ்க்கையில் அமைந்துவிடும் நமக்கெல்லாம் மிகப்பெரிய அறைகூவல். தெய்வம் என ஒன்றிருந்தால் அது இப்படித்தான் நமக்குச் செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கிறது

பதினொன்றாம்தேதி ஈரோடு வந்து அங்கிருந்து சேலம் வருவேன். வானதி வல்லபியின் அந்த இல்லத்திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ஆர்வமிருக்கும் நண்பர்கள் கலந்துகொள்ளலாம்

 

DSC05635

 

ஒரு விண்ணப்பம்

 

கால்கோள்விழா

 

நம்பிக்கை மனுஷிகள்

முந்தைய கட்டுரைமணி-1
அடுத்த கட்டுரைசந்திப்புகள் ஒரு சந்தேகம்