நவீன விருட்சம் நூறாவது இதழ்

1

 

சில சிற்றிதழ்களை நான் மறக்கமுடியாது. ஒன்று, கொல்லிப்பாவை. அதில்தான் என்னுடைய கைதி என்ற சிறியகவிதை பிரசுரமாகியது. சிற்றிதழில் வெளியான என் முதல் படைப்பு அது. இன்னொன்று முன்றில். ஆரம்பகாலப்படைப்புகள் சில அதில் வெளிவந்தன.  அவை இன்று எனக்கு முக்கியமானவை அல்ல

ஆனால் அன்று க.நா.சு பெயருடன் என் பெயர் அச்சிடப்பட்டு வெளிவந்ததை ஒரு பெரிய கௌரவமாக கொண்டாடினேன். ஞானி நடத்திய நிகழ், பொன்விஜயனின் புதியநம்பிக்கை ஆகிய இதழ்களில் என் படைப்புகள் அன்று வெளிவந்தன. சுப்ரபாரதி மணியனின் கனவு இதழ்களில் சிலவற்றை நானும் இணைந்து தயாரித்திருக்கிறேன்.

நவீன விருட்சம், விருட்சம் என்றபேரில் அன்று வெளிவந்தது. அதில் என்னுடைய தொடக்ககால படைப்புகள் சில வந்தன. அழகியசிங்கர் தளராத ஊக்கத்துடன் கால்நூற்றாண்டுக்கும் மேலாக அதை நடத்திக்கொண்டிருக்கிறார். அதன் நூறாவது இதழ் இப்போது வெளிவந்துள்ளது. தமிழ்ச்சூழலில் இது ஒரு முக்கியமான சாதனை என்பதில் ஐயமில்லை. அழகியசிங்கருக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்

 

 

முந்தைய கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 1
அடுத்த கட்டுரைகதையும் திரைக்கதையும்