மீண்டும் கோவை வருகிறேன். வரும் 20-2-2016 அன்று கோவையில் ரோட்டரி அமைப்பு அளிக்கும் துறைச்சாதனைக்கான விருதை பெறவிருக்கிறேன். என்னைப்பற்றி ஒரு சிறிய ஆவணப்படம் திரையிடப்படும்.
என் நண்பர்கள், வாசகர்கள் நிறைந்த அமைப்பு இது.பலவகையிலும் விஷ்ணுபுரம் நிகழ்வுகளுக்கும் வெண்முரசு உருவாக்கத்திற்கும் உதவுபவர்கள் அவர்கள். அவர்களின் பிரியத்தின் வெளிப்பாடான இவ்விருதை ஒரு கௌரவமாக கருதுகிறேன்.
இருபதாம்தேதி மட்டும் கோவையில் இருப்பேன். இந்நிகழ்ச்சி அனைவரும் பங்குகொள்ளத்தக்கது. நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.
இடம் இந்திய வர்த்தகசபை அவிநாசி ரோடு கோவை
நேரம் மாலை ஆறு
ஜெ