அன்புள்ள ஜெயமோகன்,
இந்த கட்டுரை படித்த பிறகு நான் மிகவும் திருப்தி அடைந்தேன். முன்பு அயன் ராண்ட் ன் we the living படித்துவிட்டு அவர் எழுத்து மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தேன். பல வருடங்கள் கழித்து சமீபத்தில், fountain head படித்தேன். மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது.
எனக்கு சமீபத்திய பயம் ஒன்று உண்டு. நான் எழுத்துக்களை முன்முடிவு செய்கிறேன் அதுதான் படைப்பின் மீதான எனது வாசிப்பை குறைக்கிறது அல்லது சலிப்புறச் செய்கிறது என்று. ஆனால் அதே நேரம் என்னால் தெளிவாக அயன் ராண்ட் டை மறுக்க முடிந்தது. உங்களது கட்டுரை என்னை சாந்திப் படுத்திற்று.
அப்புறம், வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாய்- ன் “தன் வெளிப்பாடு” படித்திருக்கிறீர்களா? இன்று வரை மூன்று புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன. 1 தன் வெளிப்பாடு (சுனில் கங்கோபாத்யாய்) 2 பெட்ரோ பரமோ (juan rulfo ) 3 பதேர் பாஞ்சாலி.
பாலா, கோவில்பட்டி.
அன்புள்ள பாலா
கலைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் இடையேயான வேறுபாடு மிக நுண்மையானது. அதை ஒருவர் தன் அனுபவம் மூலமே உணர முடியும். அதை சொல்லி விளக்கிவிட முடியாது. ஆனாலும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது – அப்படி ஒன்று உண்டு என. அது ஒரு சூழலில் அவசியத்தேவை.
கலைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உள்ள வேறுபாடு நீங்கள் சொன்ன மூன்று கலைப்படைப்புகளுக்கும் அயன் ராண்டின் நாவல்களுக்கும் இடையேயான வேறுபாடுதான்
வாழ்த்துக்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் வலைத்தளத்திலும் பிறகு நூலாகவும் வந்த எழுதுவதைப் பற்றிய கட்டுரைகளை படித்து விட்டு இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு உள்ளீளுடன் எழுத முயன்று கொண்டிருக்கிறேன்.
மேற்குறிப்பிட்ட கட்டுரைகளுக்காக என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் . பசியுள்ளவன் ருசியை உணர்வது போல் அக்கட்டுரைகளின் முக்கியத்துவத்தை உணர்கிறேன்.
—
shankaran e r
http://shankaranerbest.blogspot.com/
அன்புள்ள சங்கரன்
அவை என்ன செய்யக்கூடாது என்னென்ன ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது என்பவை மட்டுமே. எப்படிசெய்யவேண்டுமென நீங்களே எழுதிக்கற்கவேண்டியதுதான். வாழ்த்துக்கள்
ஜெ
எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று இரண்டு இடுகைகளை என் வலைப்பூவில் இட்டுள்ளேன்.
www.pirapanjakkudil.blogspot.com சென்று காணவும். தங்கள் காமெண்ட்ஸ் எதிர்பார்க்கிறேன்.
-ரமீஸ் பிலாலி.
***